பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்

வேண்டும் என்பதையும் அறிந்துகொள்வதே ஆட்டத்தின் முக்கிய திறன் நுணுக்கமாகும்.

பந்தைப் பிடிக்கின்ற விதம், அதற்காக விரிந்து நிற்கும் விரல்களின் நிலை, பிடித்த பந்தை எறியவோ, அல்லது தரையில் தட்டிக் கொண்டு ஒடவோ அல்லது குழுவினருக்கு வழங்கவோ, தயாராக வைத்திருக்கும் முறை, பந்தைப் பெறுகின்ற முறை (Receiving) எல்லாம் அழகுற அமைய வேண்டும்.

‘பந்து உன்னிடம் வரும் என்று காத்திராதே; அதை நாடி நீ செல்’ என்பது பந்தைப் பெறுவதற்காகக் கூறப்படும் முதுமொழியாகும். பந்தைத் தேடி நாம் ஒட வேண்டும், பெற வேண்டும். இல்லையேல் மற்றவர்கள் அதைத் தங்களுக்கென உரிமையாக்கிக் கொண்டு முன்னேறத் தொடங்கி விடுவார்கள்.

ஆகவே, கைகளை நீட்டி விரல்களை விரித்து பந்தைப் பிடிக்க வேண்டும். முன்புறமாகக் கைகளை நீட்டி பந்து கைகளுக்கிடையே நன்கு அமருமாறு விரல்களை விரித்து, (அவரவர் பழக்கப்படி) ஒரு காலை முன்னே வைத்துப் பிடிக்கவேண்டும்.

வலது கையை அதிகமாகப் பயன்படுத்துவோர் இடது காலே முன் வைப்பார்கள். இடது கையை (Left handers) வெகுவாகப் பயன் படுத்துவோர் வலது காலை முன்வைப்பார்கள். உடலைத் தன்னிலைப்படுத்தித் திடமாக நிற்க வேண்டும். உள்ளங்கைகளில் பந்து விழுமாறு பிடிக்கக்கூடாது. ஏனெனில், வேகத்தோடு வரும் பந்து உள்ளங்கைகளில் பட்டுக் குதித்து ஒடி விடும். அதைத் தடுக்க விரல்களின் முன் தசைப்பாகங்களிலும் கட்டை விரல்களிலும் அமருமாறு அழுத்திப் பிடிக்க