பக்கம்:விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ή தாட்டம் 87

வேண்டும். கவனமின்றிப் பிடித்தால், கைவிரல்கள் பந்துள் அழுந்தி வலியையும் சுளுக்கையும் ஏற்படுத்தும்.

பந்து வரும் திசையை நோக்கி நின்று, பந்தைப் பிடித்தல் நல்லது. ஆல்ை, விரைவுமிகுந்த இந்த ஆட்டத்தில் அல்லா தடவையிலும் நேரே நின்று வாங்குதல் எளிதன்று. அதற்காகப் பந்தைப் பிடிக்கும் முன்னர் எப்படி காலே முன் வைத்து வாங்குகின்றாேமோ. அதேபோல் வாங்கிய பின்பும் ராஜ பின்னுக்குத் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும். இன்னும் பந்தை வாங்கியவுடன் இழுத்துத் தன் உடம்புக் கருகில் வைத்துக் கொள்வது நல்லது.

மேற்கூறிய முறை, மற்ற ஆட்டக்காரர்கள் ஒடி வந்து பந்தைத் தட்டிப் பிடுங்கிக் கொள்ளாதிருக்க உதவுகிறது. மற்றும் எறிவதற்கும், வழங்குதற்கும், தட்டிக் கொண்டு ஒடுவதற்கும் ஏற்ற முறையில் பந்தைத்தன் விருப்பம் போல் எறியவும் ஆடவும் இம்முறை பயன்படுகிறது. பந்து பக்கவாட்டில் வந்தாலும், நேராக வந்தாலும் முன்னுக்கு ஒடிப் பெறுவதே சிறந்த முறையாகும். இவை சிறந்த ஆட்டமும்கூட. இப்படி பெறுபவரின் ஆட்டம் சிறப் பாகவும் எழிலாகவும் அமையும்.

வழங்கல் அல்லது கைமாற்றி அனுப்பல் (Passing)

கூடைப் பந்தாட்ட ஆட்டக்காரர்களிடையே பந்தை கைமாற்றும் முறை, சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் அமைந்தாலொழிய, ஆட்டத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அமைவது கடினமாகும். இல்லாவிடில், அந்த ஆட்டம் காண்பதற்கு கேலிக்கூத்தாக அமையும்.

தனியாளாய் பந்துடன் ஒடி, தானே வளையத்தைக் குறி நோக்கி எறிவது மிகமிகக் கஷ்டம், ஆகவே, பந்தைக் பிசிமாற்றுதல் எளிதானல், எதிரிகள் தடுமாற்றம் அடைவ