பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 விளையாட்டுக்களின் விதிகள் *Ec

கம்பங்களுக்கு வெள்ளை வண்ணப் பூச்சும், பின் பலகை களுக்கு அதேபோல் வெள்ளை வண்ணப்பூச்சும் பின் பலகைகளின் முன்புறத்திற்கு திண்மையான (Dark) வண்ணமும் பூசப்பட்டிருக்க வேண்டும். elq-(5th sull-Lib (Shooting Circle)

கடைக்கோட்டில் உள்ள ஒவ்வொரு இலக்குக்கம்பத்திலிருந்தும் 16 கெச அளவு கடைக்கோட்டில் குறித்து, ஒரு அரை வட்டம் குறித்தால், அதே சமயத்தில் இலக்கு எல்லையான 4 கெசதுர அளவு அரைவிட்டக்கோடுகள் முடிகிற இடத்தில் குறித்து, அதில் ஏற்படுகிற அரைவட்டப் பரப்பே, அடிக்கும் வட்டம் என்று அழைக்கப்படுகிறது. இனி இந்த அடிக்கும் வட்டம், வட்டம் என்றே அழைக்கப்படும்.

கடைக்கோட்டின், இலக்கு அமைந்திருக்கும் மைய இடத்திலிருந்து, வட்டத்திற்குள்ளான முன்புறத்தில் 7 கெச தூரத்திற்கு ஒரே குறியீடு (Mark) அமைக்க வேண்டும். அந்தக் குறியீடு, 6 அங்குல விட்டம் உள்ளதாக அமைய வேண்டும்.

2. ஆடப் பயன்படும் பொருட்கள்

1. பந்து

(அ) விதிப்படி அமைந்த பந்தின் (Regulation ball) மேலுறை, வெள்ளைத் தோலால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது வேறு தோலால் செய்யப்பட்டிருந்தாலும் வெள்ளை வண்ணப்பூச்சு உள்ளதாக (Painted) இருக்க வேண்டும். அது சாதாரணக் கிரிக்கெட் பந்தின் மேலுறையை ஒத்தது போலத் தைக்கப்படலாம் அல்லது தையல் விளிம்பு தெரியாமலும் ஆக்கப்படலாம்.

(ஆ) சாதாரண கிரிக்கெட் பந்தைப் போல, பந்தின் உள்பாகம் தக்கையாலும் (Cork) முறுக்கேறிய கெட்டி நூலாலும் (Twine) செய்யப்பட வேண்டும்.

பந்தின் கனம் 5% அவுன்சுக்கு மிகாமலும், 5% அவுன்சுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். (156 கிராம் முதல் 163 கிராம்

வரை).

(ஈ) பந்தின் சுற்றளவு 9% அங்குலத்திற்கு மிகாமலும், 8’, அங்குலத்திற்குக் குறையாமலும் இருக்க வேண்டும். (22.4 செ.மீட்டரிலிருந்து 23.5 செ.மீ. வரை)

(உ) வேறுவித அளவுள்ள அல்லது வண்ணம் உள்ள பந்தைப் பயன்படுத்த வேண்டுமானால், குழுத் தலைவர்கள் இருவரது