பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 151

அல்லது எதிர்பாராத இடையூறுகள் நேர்ந்தால், அதனால் வீணாகிப் போன நேரத்தை எல்லாம் கழித்துக் கூட்டி, ஆட்டத்திற்கு உண்டான முழு நேரத்தையும் ஆட்டக்காரர்கள் ஆடுமாறு செய்ய வேண்டும்.

(ஊ) ஒரே ஒரு நடுவர் மட்டும் இருந்தால், பக்கக்கோடுகள் பற்றிய முடிவினைக் கொடுக்க, இரண்டு கோடு காப்பாளர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

(எ) விளையாடும் நேரத்தில், நடுவர்கள், ஆட்டக்காரர்களுக்குத் தேவையான ஆட்டக் குறிப்பைத் (Coaching) தரக்கூடாது.

(ஏ) குழுக்கள் பெற்றிருக்கும் வெற்றி எண்களை நடுவர் எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

2. எதிர்பாராத இடர்கள்

(அ) ஒரு ஆட்டக்காரர்அல்லது நடுவர் தனது கடமையை ஆற்ற இயலாது போனால், நடுவர் அல்லது இரண்டாவது நடுவர் தற்காலிகமாக ஆட்டத்தை நிறுத்தி வைக்கலாம். அவ்வாறு ஆட்டம் நிறுத்தி வைப்பதற்குச்சற்று முன்னதாக, பந்து இலக்கினுள் நுழைந்து வெற்றி எண் பெற்றுவிட்டால் அது வெற்றி எண் என்றே கொள்ளப்படவேண்டும். -

ஏனெனில், அந்த எதிர்பாராத நிகழ்ச்சி (Accidents) நடவாது இருந்திருக்குமானால், பந்து இலக்கினுள் நுழைந்திருக்கக் கூடும் என்று நடுவர் அபிப்பிராயப்பட்டால்தான் அவ்வாறு அனுமதிக்க முடிம். - -

(ஆ) நடுவரால் தேர்ந்தெடுக்கப்படும் இடத்தில் புல்லி எடுக்கப்பட்டு ஆட்டம் மறுபடியும் தொடங்கும். (புல்லி விதியைப் பின்பற்றி). . -- 3. நடுவர்களுக்குச் சில அறிவுரைகள்

திறமையாக நடுநிலைமையுடன் (Umpiring) ஆட்டத்தை நிர்வகிக்கின்ற தன்மையானது, ஆட்டக்காரர்கள் விதிகளை அறிந்து பின்பற்றுவதற்கு ஒரு பயிற்சியை அளிப்பதுடன், ஆட்டத்தின் தரத்தையும் உயர்த்துவதாக அமைகிறது. திறமையுள்ளநடுநிலைமை என்பது விதியை மீறும் ஒவ்வொரு செயலையும் தண்டிப்பதில் மட்டும் இல்லை. - -

ஒரு நடுவர் எப்பொழுதும், தன் கட்டப்பாட்டின் கீழ் ஆட்டத்தைக் கொண்டு வரவும், அதைக் கடைசிவரை காத்துக் கொள்ளவும் வேண்டும். விதிகளை மீறுவதன் மூலம், ஆட்டக்காரர்கள் பலனை