பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 173

5) நீ எறிந்து வழங்குவதில்தான் வெற்றி எண்ணைப் பெற முடியும். உன் எதிராளியின் எறிந்து வழங்குதலினால் அல்ல.

6) வளையத்தை எறிவதிலும் அல்லது எறிந்து வழங்குவதிலும் கையை உயரே வைத்து (Over hand) எறிகின்ற முறையை எந்த விதத்திலும், எந்த உருவத்திலும் பயன்படுத்தக் கூடாது. வலையை ஒட்டியபடி வேகமாக எறியப்படும் வளையத்தைப் பிடித்து, அதை அனுப்ப முயலும் பொழுதும், கையை உயரேதுக்கிஇவ்வாறு கையை உயரே தூக்கி எறியும் பழக்கத்தைத் தடுக்கத் தேவையான ஆட்டப் பயிற்சிகளை செய்து, நிறுத்த வேண்டும்.

7) குறைந்தது 6 அங்குலமாவது உயர்ந்த அளவு உயரே வைத்துத்தான் வளையத்தை எறிந்து வழங்குவதோ, விளையாடு வதோ இருக்க வேண்டும். வளையத்தை எடுத்தாடுவது உயரத்திலோ அல்லது தாழ்ந்த நிலையிலோ இருந்தாலும் கவலையில்லை. ஆனால் எறிவதிலும் விளையாடுவதிலும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஏமாற்றுதல் அல்லது எறிவதற்குத் தயங்கித் தாமதப் படுத்துவது எல்லாம் ஆட்டத்தில் அனுமதிக்கப்படுவது இல்லை. நீங்கள் எந்த இடத்தில் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் வளையத்தைப் பிடித்த உடனேயே, திருப்பி அனுப்பிவிட வேண்டும். வலைக்கு இருபுறமும் உள்ள பொதுத் தரையில் உங்கள் கால்கள் படக்கூடாது. வளையம் எங்கு விழுந்து கிடக்கிறது என்பதைக் கருதாமல், வளையம் எந்தக் கோட்டில் விழுந்தாலும் அல்லது தொட்டாலும் சரி என்று கொண்டு ஆட வேண்டும்.

8) வளையம் எறிவதில் சில சிறப்புக் குறிப்புகள்: நின்றபடி கையைப் பின்புறமாகக் கொண்டு சென்று ‘எறிந்து வழங்குவது’ (அதாவது வலது கால் முன்புறமாக இருக்கும் வண்ணம்) சந்தேகத்திற்கில்லாதபடி சிறப்பான ஒன்றாகும். போட்டி ஆட்டத்தில் இவ்வாறு எறிவதில் கொஞ்சம் தந்திரமும் இருக்கவேண்டும். வெற்றி தரக்கூடிய எல்லா வெற்றி எண்களை எடுக்கின்ற வாய்ப்பினைத் தருவதுடன், வளையப் பந்தாட்டம், ஒரு சிறந்த இன்பகரமான பொழுதுபோக்கு விளையாட்டு என்பதையும் இது நிரூபிக்கிறது.

9) இடதுகால் முன்புறமாக இருக்கும் வண்ணம் நின்றபடியாவது அல்லது ஓடி வந்தாவது கையை முன்புறமாகக் கொண்டு சென்று, வளையத்தை எறியும் ஆட்டம் வேகமாகவும், அதே சமயத்தில் தாக்கி ஆடுகின்ற ஆட்டமாகவும் அமையும். இரண்டு விதமான எறிந்து வழங்குவதில், வளையம் கையை விட்டு நீங்கும் பொழுது, இரண்டு கால்களும் கோட்டின் மேலாவது அல்லது கோட்டிற்குப்