பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 207

(ஆ) இரண்டு கால்களும் தரையில் இருப்பதுபோல, ஒரு ஆட்டக்காரர் பந்தை அடைகிறபொழுது அல்லது தாவிக் குதித்துப் பந்தைப் பெற்று, இரண்டு கால்களையும் சமமாகத் தரையில் (ஒரே. நேரத்தில்) ஊன்றியிருக்கும் பொழுது, தடுத்தாடுபவருக்கும் தாக்கி ஆடுபவருக்கும் அருகருகே இருக்கும் இரண்டு கால்களுக்கு

இடையே காணும் தூரத்தைக் கீழ்க்காணும் முறையில் நிர்ணயம்

செய்ய வேண்டும். -

(இ)பந்தைவைத்திருப்பவர்சுழற்தப்படி(Pvo)எடுத்தால்,அந்த சுழற்தப்படி எடுக்கும் காலிலிருந்து எதிராளியின் அருகில் இருக்கும் கால் வரை உள்ள தூரம். - -

- (FF) பந்து எறியப்படுகின்ற வரை, தரையை விட்டுக் கால் = நகராமல் அங்கேயே நிலையாக இருந்து எந்தத் திசைப் பக்கமாகவாவது, காலை எடுத்து வைத்தால், அந்தக் காலுக்கும், தடுப்பவரின் அருகில் உள்ள காலுக்கும் இடைப்பட்டதுாரம்.

(உ) இரண்டு கால்களையும் ஊன்றி, தாவிக் குதித்துப் பந்தை எறியும்போது, ஏதாவது ஒரு காலுக்கும், தடுத்தாடுபவரின் அருகாமையில் உள்ள காலுக்கும் உள்ள இடைப்பட்டதுரம் இதனை நிர்ணயித்து, இத்தனை அடி தூரம் என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். . - . -

தடுத்தாடும் ஆட்டக்காரர் ஒருவர், எதிராளிக்கும் தனக்கும் உள்ள இடைப்பட்ட தூரம் (மேலே காணும் விதிகளின்படி) 3 அடிக்குக் குறைவில்லாமல் இருந்தால், அவரது ஆட்டத்திற்கும் இயக்கத்திற்கும் ஏற்ற வகையில் தடுத்தாடலாம். -

எதிராளியைத் தடுத்து நிறுத்தியாட வேண்டும் என்ற முயற்சியில், எதிராளியை நோக்கி ஒரு காலடி (Step) வைக்கும் பொழுது, மேலே கூறிய விதிப்படி, மூன்று அடி தூரத்திற்குள்ளாகத் தன் காலடியை வைத்துவிட்டால், அவர் எதிராளியின் இயக்கத்தைத் தடை செய்கிறார் (Obstruction) என்றே கருதப்படுகிறார்.

பந்தை வைத்திருக்கும் ஒரு ஆட்டக்காரர் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக, மேலே கூறிய விதியை மீறி, மூன்றடி தூரத்திற்குள்ளாகக் காலடி வைத்துவிட்டால், தடுத்தாடுபவர், அவரைத் தடுத்தாடலாம். அது தவறல்ல.

பந்துடன் இருக்கும் எதிராளியைத் தடுக்க முயற்சிக்கும் தடுக்கும் குழு ஆட்டக்காரர், மூன்றடிக்குள்ளாக நின்று கைகளை நீட்டித் தடுக்க முயற்சித்தால், அது வழியடைத்துத் தடை செய்வதாகவே கருதப்படும்.