பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

co o - டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 251

(இ) பந்தை அடித்தாடி அனுப்பிய பிறகு அடித்தாடிய மட்டை வலையைக் கடந்து மறுபுறம் சென்றாலும், அது சரியான ஆட்டமாகும். அதாவது அடித்த பந்து வலையைக் கடந்த பிறகு - பந்து சரியாகக் கோட்டில் விழுந்தால்-மட்டை வலையைக் கடந்து விட்டாலும், அது தவறில்லை.

(ஈ) பந்தை அடித்து சர்வீஸ் போடும்போதும் அல்லது வந்தப் பந்தைத் திருப்பி அனுப்பும் போதும், தவறிக் கீழே விழுந்த நிலையிலும், பந்து எதிர் ஆடுகளப்பகுதிக்குள் பந்து விழுவதுபோல அனுப்பி விட்டால், அதுவும் சரியான ஆட்டமாகும். - -

ஒற்றையர் ஆட்டம் நடத்துகிற போது, ஆடுகளத்தின் அமைப்பானது இரட்டையர் ஆட்டத்திற்குரிய ஆடுகளத்தின் அளவுகளோடுதான் கோடுகள் குறிக்கப்பட்டிருக்கும், இவை யெல்லாம் நிரந்தரமாகப் பொருத்தப்பட்டிருக்கும் பொருட்கள் என்பதால், ஒற்றையர் ஆட்டத்தைக்குறிக்கும். எல்லைக்கோடுகளால் அமையப் பெற்ற ஆடுகளத்தையே அது குறிப்பதாகும்.

அடித்தாடி அனுப்புகிற பந்தானது, ஒற்றையர் ஆட்ட எல்லைக்கும் இரட்டையர் ஆட்ட எல்லைக்கும் இடையேயுள்ள பகுதியில் வலைக் கம்பியினை அல்லது கம்பத்தைத் தொடாமல் வந்து, சரியான ஒற்றையர் ஆடுகள எல்லைப்பகுதிக்குள் விழுந்தால், அது சரியான் பந்தாகும்.

ஓர் ஆட்டக்காரர் பந்தை அடிக்க முயற்சிக்கிற போது, வைக்கப்பட்டிருக்கும் நிரந்தர அமைப்புக்களில் உள்ள பொருட்கள் இடையூறாக இருந்தன என்றால், மீண்டும் அந்தவெற்றி எண்ணுக்காக ஆடுகிற வாய்ப்பு வழங்கப்படும் (Let). ,

ஓர் ஆட்டக்காரர் தனது முதல் வெற்றி எண்ணை (First Point) எடுத்தால் அது 15 வெற்றி எண்கள் எடுத்தார் என்ற எண்ணில் அவரது கணக்கில் குறிக்கப்படும். . - அவர் இரண்டாவது வெற்றி எண்ணை எடுக்கிறபோது 30 வெற்றி எண் என்றும்; மூன்றாவது வெற்றி எண்ணை எடுக்கிறபோது 40 வெற்றி எண் என்றும் கணக்கிடப்படும். அவர் நான்காவது வெற்றி எண்ணை எடுத்துவிட்டால், அந்த முறை ஆட்டத்தில் (Game) அவர் வென்றதாக அறிவிக்கப்படும். -

இரண்டு ஆட்டக்காரர்களும் 3 வெற்றி எண்களை எடுத்திருந்தால், அது சமநிலை என்று (Deuce) அறிவிக்கப்படும். அதற்குப் பிறகு, ஒருவர் அடுத்த வெற்றி எண்ணை (Next Point)