பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா - 255

போடுவார். இரண்டாவது முறை ஆட்டத்தில் சர்வீஸ் போட்டவரின் பாங்கர் தொடர்கிற 4-வது முறை ஆட்டத்திற்கான சர்வீஸைப் போடுவார்.

இப்படியே தொடர்ந்துவருகிற தொகுப்பாட்டங்களிலும், சர்வீஸ் போடுகிற முறை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

சர்வீஸ் பந்தை எடுத்தாடுகிற இரட்டையர்கள் பற்றிய நெறிமுறை, முதல் தொகுப்பாட்டத்தின் முன்னதாகவே முடிவெடுக்கப்பட வேண்டும். பந்தை எடுத்தாட வேண்டிய இரட்டையர்கள் (Receivers) இருவரில், யார் முதலில் சர்வீலை எடுத்தாட வேண்டும் என்பது முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு தொடர்ந்து மாறி வருகிற ஒற்றை இலக்க முறை

ஆட்டங்களில் (Oddgame) எல்லாம், அவரேபந்தை எடுத்தாடுபவராக

ஆடுவ ார்.

அதேபோல எதிர்க்குழுஇரட்டையர்கள் தங்களில்யார்முதலில்

இரண்டாவதாக வருகிற முறை ஆட்டத்திlன் சர்வீஸை எடுத்தாடுவது

என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதுபோலவே அடுத்தடுத்துத் தொடர்ந்து வருகிற இரட்டை இலக்கமுறை ஆட்டங்களில் (Evengame) எடுத்தாடுகிற வாய்ப்பை, தொகுப்பாட்டம் அனைத்திலும் ஆடவேண்டும். - - -

பாங்கர்கள் ஒவ்வொரு முறை ஆட்டத்திலும், ஒருவர் மாற்றி ஒருவர் (Alternatively) என்பதாக சர்வீஸை எடுத்தாடவேண்டும்.

இரட்டையரில் ஒருவர், தனக்கு சர்வீஸ் வாய்ப்பு முறை வராதபோது அடுத்தவருடைய சர்வீஸைப் போட்டு விடுகிறபோது, அந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக உரியவர் சர்வீஸைப் போட வேண்டும். தவறுதலாக சர்வீஸை போட்டவர் கண்டுபிடிப்பதற்கு முன் எடுத்த வெற்றி எண்கள், எதிரணி எடுத்த வெற்றி எண்கள் எல்லாம் கணக்கில் வைக்கப்படும் (Rockoned). தவறுகண்டுபிடிக்கப்படுவதற்கு முன், அந்த முறை ஆட்டம் முடிந்து போயிருந்தால், சர்வீஸ் போடுகிற அந்த ஒழுங்கு முறை (Order) அதாவது வரிசைமுறை மாற்றியதுபோலவே அப்படியே இருக்கும். முறை ஆட்ட சமயத்தில், சர்வீஸை எடுத்தாடும் வரிசை முறையில் குழப்பம் ஏற்பட்டு, எடுத்தாடுபவர் (Receiver'மாறி எடுத்தாடுகிறபோது தவறு கண்டுபிடிக்கப்பட்டாலும், அந்த முறை ஆட்டம் முழுவதும் முடியும் வரை, அப்படியே தொடரும். அந்தத் தொகுப்பாட்டத்தில் உள்ள அடுத்த முறை ஆட்டம் தொடங்குகிற