பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 293

பிடிக்கும்பொழுது சரியான ஆடுகளத் தரையில் இருக்கிறாரா என்பதைப் பார்க்கக்கூடாது.

தண்டனை பந்து ஆட்டத்தில் உள்ளதாகக் கருதப்படும். தள ஒட்டக்காரர்கள் தளத்திற்கிடையில் தொடப்பட்டால் ஆட்டமிழக்க லாம் என்ற நிபந்தனைக்குட்பட்டு, எத்தனை தளங்கள் வேண்டும் என்றாலும் ஓடி முன்னேறிக் கொள்ளலாம்.

பந்தை அடித்தாடியவர். அவர் அடித்தாடிய பந்து ஆடுகளத் தரைப் பகுதிக்குள்ளேதான் சென்றது என்ற விதிக்கு ஏற்ப இருந்தால், அவரும் தள ஓட்டக்காரராக ஆகிவிடலாம். 14. எத்தனை தளங்கள் எடுத்துக் கொள்ளலாம்?

(அ) அடித்தாடிய பந்தானது சரியான ஆடுகளப் பகுதிக்கு மேல் அல்லது மேலாகச் சென்று பந்தடித்தாடும் தளத்திலிருந்து 225 அடிக்கு அப்பாலும் உள்ளவேலிக்குப் பின்புறம் அல்லது தடுப்புக்கு அப்பால் போய் விழுந்தால், அதற்கு ஒரு ஓட்டம் தரப்படும் (Home Run).

(ஆ)225 அடிக்கு அப்பால் போய் பந்து விழாமல், 225 அடிக்குள் இருந்தால், அதற்கு 2 தளங்கள் மட்டும் ஓடிக் கொள்ளலாம் என்று அனுமதிக்கப்படும்.

15. சரியாக அடித்தாடிய பந்து தவறானதாக மாறுவது

எப்படி?

(அ) சரிய கு அடித்தாடிய பந்தானது பந்தடித்தாடும்தளத்திற்கும் முதல் தளத்திற்கும், பந்தடித்தாடும் தளத்திற்கும் மூன்றாம் தளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள தவறான தரைப் பகுதியில் பந்து தேங்கி நின்றால்;

(ஆ) பந்து அடிபட்டு மேலே போகும்பொழுது முதல் அல்லது மூன்றாம் தளத்திற்குத் தள்ளி உள்ள வெளிப்புற பகுதியின் (Foul Ground) மேல் அல்லது மேலாகப் போய் விடுதல்;

(இ) முதல் அல்லது மூன்றாம் தளத்திற்கு அப்பால் உள்ள வெளிப்புற பகுதியினை முதலில் பந்து தொட்டு விடுதல்;

(ஈ) தவறான தரையாகக் கருதப்படும் வெளிப்புறப் பகுதியில் இருக்கும் நடுவர், ஆட்டக்காரர் உடை அல்லது உடலினைத் தொடுதல் அல்லது மற்ற தடுப்புக்கள் மேல் தொட்டுப் பந்து விழுந்தால்;

சரியாக அடித்தாடிய பந்தும் தவறான பந்து என்று நடுவரால் அறிவிக்கப்படும்.