பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா r 307

போனால், அடித்தவர் ஒரு முழு ஓட்டம் எடுக்கத் தகுதியானவராவார். ஆனால் வேலியோ, பார்வையாளர் நிற்குமிடமோ 225 அடிக்கும் குறைவான தூரத்திற்குள் இருந்தால், இரண்டு தளங்கள் மட்டுமே ஒடலாம். அடித்தவர் சரியான் முறையில்தான் ஓடவேண்டும். இந்தக் குறைவான தூரம் நடுவருக்குச் சரியாக தெரியும்படி செய்ய வேண்டும். . . . -- - *

2. சரியான பந்து, வேலியைத் தாண்டி உருண்டோ அல்லது குதித்து மேலேயோ, அடியிலோ தடைகளைத் தாண்டி சென்றால்.

தண்டனை பந்து விளையாட்டிலிருக்கும் தள ஓட்டக்காரர்கள் ஒரு தளம் வரையிலும் செல்லக்கூடிய விதிக்குட்பட்டு ஓடலாம். 7. தளம் நோக்கித் திரும்பி வருதல் -

ஒரு தள ஓட்டக்காரர் திரும்பவும் முன்னிருந்ததன் தளத்திற்கு வர வேண்டும் என்பது கீழ்க்காணும் சமயங்களில் தீர்மானிக்கப் படுகிறது.

1. தவறான பந்தைத் தவறான முறையில் பிடித்ததாக நடுவர் கூறினால்; - - 2. தவறாக அடிக்கப்பட்ட பந்து என்று நடுவர் கூறினால், 3. யாராவது ஒரு தள ஒட்டக்காரோ அல்லது அடித்தவரோ உள்ளே நுழைந்து இடையூறு செய்ததற்காக வெளியேற்றப்பட்டால், மற்ற தள ஓட்டக்காரர்கள் நடுவரின் தீர்மானப்படி முன்பிருந்த தளங்களுக்கே திரும்பி வர வேண்டும். -

4. தள நடுவரின் உடையோ அல்லது அவரோ பிடிப்பவர் எறிகின்ற பந்தினைத்தடுத்தால், -

5. அடித்தாடுபவரின் உடலின் அல்லது உடையில் எந்தப் பகுதியாவது வீசியெறிந்த பந்தைத் தொட்டால்; -

6. சரியான பந்தானது தடுத்தாடுபவர்கள் தொடு முன்னர் நடுவரின் மீது பட்டுவிட்டால்; r -

7. அடித்தாடுபவரின் மேல் எறிந்தாடும் பந்து நேராகப் பட்டால்; தண்டனை: 1. பந்து நிலைப் பந்தாகிறது. 2. அடித்தாடுபவர் தள ஆட்டக்காரராக மாறாமலிருந்தால் தவிர, மற்ற தள ஆட்டக்காரர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து தொடப்பட்டால், ஆட்டமிழக்க மாட்டார்கள் என்ற உரிமையுடன்

மீண்டும் முன்பிருந்த தளம் நோக்கித் திரும்ப வேண்டும்.