பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விளையாட்டுக்களின் விதிகள்

கால்களையோ கோட்டின் மேல் வைத்து, குதிகால்களைத் தூக்கி பின்னர் ஒரு காலின் பகுதி கோட்டின் மேல் இல்லாமல், ஆடுகளத்தின் உட்பகுதியைத் தொட்டுக் கொண்டிருப்பார்கள். அதனை விதியை மீறியதாகக் கொள்ள வேண்டும்.

(உ) உள்ளெறிவோர் ஆடுகளத்தை நோக்கி நின்றே பந்தை எறிய வேண்டும்.

(ஊ) ஆட்டக்காரரின் கால்கள் தொடர்ந்து ஆடுகளத்தின் பக்கமாக இருந்தாலும், அவர் ஆடுகளத்தின் பக்கம் நோக்காது, உடலைத் திருப்பிக் கொண்டிருந்தாலும், தலையையோ, தோள்களையோ ஆடுகளத்தை நோக்கி வைத்திருந்தாலும் போதும்.

(எ) உள்ளெறிவோர் சில சமயங்களில் எதிராளியின் இலக்கிற்கு உள்ளே பந்தை எறிந்து விடுவதுண்டு. இந்தச் செயலுக்கு, நடுவர் குறியுதை வாய்ப்பைத் தடுக்கும் குழுவினருக்குத் தர வேண்டும். தன்னுடைய இலக்கிற்குள்ளே பந்தை எறிந்து கொண்டால், எதிர்க்குழுவினருக்கு l வாய்ப்பை வழங்க வேண்டும்.

(ஏ) ஆடுகளத்தின் இரு பக்கங்களிலும் உள்ள பக்கக்கோடுகள். கடைக்கோடுகள் இரண்டும் ஆடுகளத்தின் பாகங்களே.

(ஐ) பந்தை உள்ளெறிந்து ஆட்டத்தைத் தொடங்கு முன், பந்தை எறிய இருக்கும் ஆட்டக்காரரை எதிராளி ஒருவர் வேண்டுமென்றே உதைத்தால், மீண்டும் உள்ளெறிவதன் மூலம் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும். உதைத்த ஆட்டக்காரரை எச்சரிக்கலாம் அல்லது ஆடுகளத்தை விட்டே வெளியேற்றித் தண்டிக்கலாம். (மன்றம், 23 ஜூன் 1934)

(ஒ) பக்கக் கோட்டிற்கு வெளியே சென்று பந்தை உள்ளெறியும் உரிமை தனக்கு உரியதென்று, உரிமை பாராட்டுவது முறையற்றது. அது வழக்கத்திற்கும் விரோதமானது. துணைநடுவரே அந்த முடிவை எடுக்குமாறு ஆட்டக்காரர்கள் விட்டுவிடவேண்டும்.

(ஓ) எதிராளிக்கு உள்ளெறியும் வாய்ப்பைக் கொடுத்த பிறகு, மற்றவர்கள் கோபத்தால் பந்தைத்துக்கி வெளியே எறிவதோ அல்லது உதைத்து எட்டி எறிவதோ போன்ற சிறுபிள்ளைத் தனமான செயல்களைச் செய்ய அனுமதிக்கக் கூடாது.

8. குறியுதை, முனையுதை எடுக்கப்படும் பொழுது

(அ) குறியுதையில் உதைக்கும் குழு எது என்று தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.