பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 45

(ஆ) பந்து சரியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறதா என்றும், விதிகளின்படி ஆட்டக்காரர்கள் நிற்கின்றனரா என்றும், பந்தை உதைக்க அனுமதிக்குமுன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(இ) குறியுதையில் ஒறுநிலைப் பரப்பிற்கு வெளியே செல்லுமாறு பந்து உதைக்கப்படல் வேண்டும். அந்த எல்லைக்கு வெளியே பந்து உதைக்கப்படாவிடில், மறுமுறையும் அவ்வுதை எடுக்கப்படவேண்டும்.

(ஈ) முனையுதையில், உதைக்கப்பட்டப் பந்து இலக்குக் கம்பத்தில் பட்டு உதைத்தவரிடமே திரும்பி வந்தால், மற்ற ஆட்டக்காரர்கள் பந்தைத் தொட்டு விளையாடு முன்பே அவரே இரண்டாவது முறையும் ஆடக்கூடாது.

(உ) முனையுதை எடுக்கும் ஆட்டக்காரர்முனை உதை எடுக்கும் முன்னர், முனைக்கொடிக் கம்பத்தை நீக்கிவிட்டால், உதை எடுக்க சைகைக் கொடுக்குமுன், அக்கம்பத்தை அதே இடத்தில் ஊன்றி வைக்குமாறு உத்தரவிட்ட பிறகே அனுமதி தர வேண்டும்.

8. நடுவரின் அதிகாரம்

1. அதிகாரம்

(அ) விளையாட்டை நடத்திக் கொடுப்பதற்காக நடுவர் நியமிக்கப்படுகிறார். இவர் இக்கட்டான சூழ்நிலையில் விதிகளைத் தழுவி, அதன்படி முடிவெடுக்கிறார். ஆட்டத்தைப் பொறுத்த வரையில், ஆட்டத்தின் முடிவைப் பொறுத்த வரையில் அவரது முடிவே முடிந்த முடிவாகும். நிலை உதை எடுக்க சைகை கொடுத்த உடனேயே அவரது அதிகாரம் ஆரம்பம் ஆகிறது. தவறுகளுக்காகத் தண்டனை அளிக்கும் பொழுதும், அல்லது ஆடுகளத்தை விட்டுப் பந்து வெளியே செல்லும் பொழுதும், அவரின் அதிகாரம் தொடர்ச்சியுறுகிறது. தவறுகளுக்குத் தண்டனை தரும்பொழுது, அந்தத் தண்டனையால் எதிர்க்குழுவினர் நன்மை பெறுகின்றனர் என்று அவர் திருப்தியுற்றால்தான், தண்டனை வழங்குவார்.

(ஆ) ஆட்டத்தைப் பற்றிய குறிப்புக்களை அவர் வைத்துக் கொள்ள வேண்டும். நேரக் காப்பாளராகப் பணியாற்றி, அபாயத்தாலோ அல்லது மற்றக் காரணங்களினாலோவீணாகிவிட்ட நேரத்தைச்சரிகட்டி ஆட்டமுழுநேரத்தையும் ஆடவிடவேண்டும்.

(இ) இயற்கையினாலோ அல்லது பார்வையாளர்களின் குறுக்கீடுகளினாலோ அல்லது மற்ற காரணங்களினாலோவிதிகளை மீறிய காரியங்கள் நடந்து, அதனால் ஆட்டம் நிறுத்தப்படுவது