பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விளையாட்டுக்களின் விதிகள் >

அவசியம் என்று நடுவர் கருதினால், நிலைமைக்கு ஏற்றபடி ஆராய்ந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்டத்தைத் தள்ளி வைத்தோ அல்லது முடித்தோவைக்கலாம். இம்மாதிரி நிலை ஏற்பட்டால், எந்த நடுவரின் கீழ் இது நடைபெற்றது என்பதை எழுதி, தேசிய அல்லது தலைமைக் spp (National or Affiliated Association) @ 76&TG) நாட்களுக்குள் செய்தியை அறிவித்துவிட வேண்டும். (ஞாயிறு சேர்க்கப்படவில்லை). சாதாரண அஞ்சலில் செய்தியை அனுப்பினாலே போதுமானது.

(ஈ) ஆட்டக்காரரின் தரக்குறைவான நடத்தையையும், பண்பு கெட்ட செய்கைகளையும் அவர் ஆடுகளத்தினுள் நுழைந்ததில் இருந்தே கண்டு எச்சரிக்கலாம். மீறி நடக்கும் ஆட்டக்காரரை அந்த ஆட்டத்திலேயே பங்குபெற முடியாதவாறு வெளியேற்றி விடலாம். இந்தச் செய்தியை, தேசிய அல்லது தலைமைக் கழகத்திற்கு ஞாயிறு தவிர, நிகழ்ச்சி நடைபெற்ற இரண்டு நாட்களுக்குள் சாதாரண அஞ்சல் மூலம் அனுப்பினால் போதுமானது.

(உ) ஆட்டக்காரர்களையும் துணை நடுவர்களையும் தவிர,

மற்ற எவரையும் நடுவரின் அனுமதி இன்றி, ஆடுகளத்தினுள்ளே நுழைய விடக்கூடாது.

(ஊ) அபாயகரமாக ஒரு ஆட்டக்காரர் காயம் பட்டிருப்பதாகக் கருதினால், ஆட்டத்தை நிறுத்தி, அவரை முடிந்தவரை ஆடுகளத்தை விட்டு உடனே அனுப்பி வைத்து, பின் மீண்டும் தொடங்க வேண்டும். ஒரு ஆட்டக்காரர் இலேசான காயம் அடைந்தால், பந்து விளையாட்டிலிருந்து நிறுத்தப்படும் வரை, ஆட்டத்தை நிறுத்த வேண்டியதில்லை. அந்த ஆட்டக்காரர் பக்கக் கோட்டிற்கு அருகில் செல்ல முடிந்து, அங்கு எந்த உதவியையாவது பெற முடியுமானால் அப்படிச் சென்றவரை ஆட்டத்தில் பங்கு பெறுபவராகக் கருத (5l.

(எ) முரட்டுத்தனமாக நடத்தையுள்ளவரை அப்புறப்படுத்தி விட்டு, ஆட்டத்தை உடனே (Violent-Conduct) எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி ஆட்டத்தில் பங்கு பெற முடியாதவாறு தள்ளி வைக்க, நடுவருக்கு முழு அதிகாரம் உண்டு.

(ஏ) எல்லாமுறையிலும் ஆட்டம் நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடங்க, நடுவர் சைகை தர வேண்டும்.

2. ஆட்டக்காரர்கள் - பார்வையாளர்கள் அன்பைக் கவர

(அ) ஒவ்வொரு விதியையும் நன்றாகக் கற்றுத் தெளிந்து கொண்டிருக்க வேண்டும்.