பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-” டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 47

(ஆ) ஒரு முடிவை எடுக்கும் பொழுது, எந்தக் குழுவையும் g, நடுநிலைமையாயிருக்க வேண்டும்.

(இ) எப்பொழுதும் நல்ல உடல் திற நிலையோடும் (Physical | lness) நல்ல பயிற்சியோடும் இருக்க வேண்டும்.

(ஈ) ஆடுகின்ற இரு குழுவினர் அணிந்துள்ள வண்ணச் சட்டைகளுக்கு மாறுபட்ட வண்ணம் உள்ள உடைகளையே நடுவர் அணிந்திருக்க வேண்டும். நடுவர், ஆட்டக்காரர்களுக்கும், பார்வை யாளர்களுக்கும் நன்கு கேட்கும் வண்ணம் விசில் ஊதி தன் தீர்ப்பை வழங்க வேண்டும்.

சில குறிப்புக்கள்: (அ) சில சமயங்களில் வேண்டுமென்றே ஒரு ஆட்டக்காரர் நேரத்தைக் கடத்தலாம். அவரை எச்சரிக்கை செய்ய வேண்டும்.

(ஆ) ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே ஒரு ஆட்டக்காரர் வெளியேற, அவருக்குப் பதிலாக மற்றொருவர் உள்ளே வரும் நிலைமையில், அதற்காக நிலையுதை எடுப்பதைத் தாமதப்படுத்தக் கூடாது.

(இ) இயற்கை சூழ்நிலை காரணமாகப் போட்டியைத் தள்ளி

வைக்கவோ அல்லது முடித்து வைக்கவோ எடுக்கும் முடிவு, ஆழ்ந்த சிந்தனையின் பயனாக இருக்க வேண்டும்.

(ஈ) பண்பு கெட்ட நடத்தையால் தவறு இழைக்கின்ற ஒரு ஆட்டக்காரரை எச்சரிக்கும் பொழுது, அருகில் அழைத்துப் பெயரைக் கேட்டு இதுபோல் மீண்டும் நடந்து கொண்டால் வெளியேற்றப் படுவீர் என்று திட்டவட்டமாகக் கூறி நடுவர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

(உ) ஆட்டத் தொடக்கத்திற்கு முன்னும், இடைவேளைக்குப் பின்னும் துணை நடுவர்களுடைய மணிப்பொறியோடு ஒத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(ஊ) ஆட்டத்தைப் பற்றியக் குறிப்புக்களுக்கு உங்கள் நினைவாற்றலை மட்டும் நம்பி இருந்துவிடாதீர்கள். ஆட்டம் தொடங்கிய நேரம், இடைவேளை நேரம், மிகை நேரம் இருந்தாலும் இல்லாவிடினும் எல்லாவற்றையும் ஒரு காகிதத்தில் குறித்து வைத்துக் கொள்வதுடன், வெற்றி எண்கள் எத்தனை என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும். ஒரு விசில், நன்றாக இயங்கக்கூடிய ஒரு மணிப்பொறி, இரு நாணயம், ஒரு குறிப்பேடு, ஒரு எழுதுகோல் முதலியன நடுவருக்கு அவசியம் வேண்டும். போட்டியிடுகின்ற