பக்கம்:விளையாட்டுக்களின் விதிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

EP டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 51

(ஏ) ஆட்டத்தை நடத்தும் பொழுது, எந்த முறையை நடுவர் பின்பற்றுகிறார் என்பதை அறிந்து நடப்பதில், (அதாவது மூலை விட்ட முறை (Diagonal System) ஆடுகளத்தின் குறுக்கே சென்று ஆட்டத்தைக் கண்காணித்தல்) இன்னும் மற்ற முறைகளில் ஏதாவது ஒன்று. இவை நடுவர்கள் மூலை விட்டமுறையையேதான் பின்பற்ற வேண்டும் என்பது அவசியமில்லை. ஆடுகளம், சூரியன், காற்று இன்னும் மற்ற நிலைகளையும் ஆராய்ந்து, மூலை விட்ட முறையில் மறுபகுதியைத் தேர்ந்தெடுத்து, அந்த மாற்றத்தையும் அவரது விருப்பத்தையும் கோடுகாப்பாளர்களுக்குத் தெரிவித்துவிட, அவர்களும் அதற்குரிய இடத்தில் நின்று அவருக்கு உதவி செய்வார்கள். இந்த மூலைவிட்ட முறையைப் பின்பற்றுவதால் ஆடுகளம் முழுவதையும் எளிதாகக் கண்காணிக்க முடிகிறது. விடப்படும் இடம் அதிகமில்லாமல் எல்லா இடத்திலும் சென்று கண்காணிக்கவும் ஏதுவாகிறது.

இன்னும் சேர்ந்து செயல்படுகின்ற மற்ற முறைகளையும், சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அந்த முறைகள் மூவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

9. ஆட்டம் வெற்றி தோல்வியின்றி இருந்தால்

வெற்றி எண்கள் (Goals) சமமாக எடுத்தோ அல்லது வெற்றி எண்கள் ஏதும் எடுக்காமலோ, ஒரு போட்டி ஆட்டம் முடிவடைந்தால், சீட்டெடுப்பின் மூலமோ (Lot) அல்லது நாணயம் சுண்டுதலின் மூலமோ, வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்ற முறைக்குப் பதிலாக, ஒறுநிலை உதை எடுப்பதின் மூலம், தீர்மானிப்பது எவ்வாறு என்பதில், கீழ்க்காணும் விதிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் (Tie Breaker).

வாய்ப்பினைப் பெறும் வழி

எந்த இலக்குப் பகுதியில் ஒறுநிலை உதைகளை எடுப்பது என்பதனை, நடுவர்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நடுவர் நாணயத்தைச் சுண்டி எறிதலின் மூலம் கேட்டு வெற்றி

பெறுகின்ற குழுத் தலைவரே, முதன் முதலில் ஒறுநிலை உதை எடுக்கும் வாய்ப்பினைப் பெறத் தகுதி பெறுகின்றார்.

ஒவ்வொரு குழுவிற்கும் 5 முறை ஒறுநிலை உதை எடுக்கும்

வாய்ப்பு உண்டு.