பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3.பந்தால் பிறந்த விளையாட்டுக்கள்


அறிவு தெளிவடையாத காலம். ஆதிகால மக்களை ஆண்மை ஒன்றே ஆண்டு கொண்டிருந்த நேரம். உலகில் வாழ்வதற்கும், உடலை பாதுகாத்துக் கொள்வதற்கும், முற்கால மக்களினம் வலிமை ஒன்றையே நம்பி வாழ்ந்தது. வனத்தில் வாழ்கின்ற மிருகங்களைக் கொன்று குவித்துத் தின்று சுவைத்து, இயற்கையை எதிர்த்து வாழப் பழகிக் கொண்டிருந்த சூழ்நிலை. கற்காலம் கை கொடுத்தபோது, உறங்க இடம் பார்த்தனர். உடல் நிர்வாணத்தை மறைக்க இலை தழைகளால் உடை சேர்த்தனர், இடமும், உடையும், உணவும் தங்கு தடையின்றித் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியதும், அந்த இனம் ஓய்வென்று உட்காரத் துவங்கியது. களைப்புத் தீர்ந்து களிப்பெய்தியது.

வேலையில்லாத நேரங்களில். நீர்ப் பரப்பில் பாசிபோல மனிதரை சோம்பல் பிடிக்கவே, விழித்துக் கொண்டது மனித மூளை. வேறு ஏதாகிலும் செய்தால்தான் பரபரப்புடன் பணியாற்றலாம். தேகத்தைத் திறமான நிலையிலே வைத்-