பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3 கaாந்த தடியுடன்தான் அந்த ஆட்டத்தை ஆடுவார்கள். பத் தாயிரம் பேர்களுக்கு மேல் அந்த ஆட்டத்தை காணப் பார்வையாளர்கள் பரபரப்புடன் கூடியிருக்கின்றனர். வெற்றி பெற வேண்டும் என்ற வேகத்துடன், ஆவேசத்துடன் இரு குழுவினரும் ஆடினர். எப்படி ஆடிலுைம் ஏதாவது ஒரு குழுதானே வெற்றி பெற முடியும் ? வெற்றி பெற்ற இருவரில் ஒரு குழுவினர் என்ன செய்தார்கள் தெரியுமா ? வெற்றி தந்த வேகத்தின் விளைவால், வந்த வெறித்தனத்தால், எதிராளியாக ஆடிய ஒன்பது ஆட்டக் காரர்களே யும் தடியால் அடித்தே கொன்றுவிட்டனர். பார்த்தவர்களும் பேசவில்லை. -- செவ்விந்தியர்கள் காட்டுமிராண்டிகள் தான் என்ருலும் ஆள் கூட்டத்தை ஆட்டத்தில் குறைப்பதற்காக எதிராட்டக் காரர்களை அடித்துக் கொன் ருர்கள். நாகரீகம் நிறைந்த அயர்லாந்து ஆட்டத்தில், ஆட்ட முடிவுக்குப் பிறகுங்கூட ஆட்டக்காரர்களை அடித்தே கொன்றிருக்கின்றனர்.ஏன் இந்த வெறித்தனமோ தெரியவில்லை. காலம் கனிந்து கனிந்து மாறிக்கொண்டுதானிருக்கிறது. கருத்தை அது கனிய வைப்பதாகத் தெரியவில்லை ஆமாம். ஆட்டக்காரர்களிடையே இருக்கும் ஆவேசத்தை ஆறறிவுப் பண்பு அடக்க முடியவில்லையே ! மேல் நாடுகளிலே விஆள யாட்டுப் போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றுகின்ற வர்கள், தற்காப்புக் காக கைத் துப்பாக்கிகளே வைத்துக் கொள்கின்ற அளவுக்கு, வன்முறையும் வெற்றித்தனமும் ஆட்டக்காரர்களிடையே மிகுந்திருக்கிறது. ஆடுகளத்திற் குள்ளேயே நடுவர்கள் மட்டைகளாலும், கோல்களாலும் ஆட்டக்காரர்களால் அடித்துக் கொல்லப்பட்ட செய்திகள் அடிக்கடி செய்தித் தாள்களில் எத்தனையோ வந்திருக் கின்றன. -

  • யார் வெற்றிபெற்ருர்கள் என்பது விளையாட்டின் நோக்கமல்ல. விளையாட்டுக்கும் முக்கியமல்ல. யார் எப்படி

விளையாடினர்கள்’ என்பதையே வரலாற்று ஆசிரியர்கள்