பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

வற்றிற்கெல்லாம் சுற்றி நின்றுகொண்டு பந்தயங்கட்டி சூதாட்டம் போல் ஆடினர்.

1650ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பெற்ற இந்தக் கொடுமைக்கு, செய்தித் தாள்கள் எல்லாம் வானளாவிய விளம்பரம் தந்தன. அவை பணக்காரர்களைக் கூட்டின, அறுபட்ட கோழி துடிப்பதைக் கண்டு ஆனந்தம் கண்டனர் அவர்கள்.

கோழி மட்டுமா கொடுமைப்பட்டது? நாய்களும் தான். நாய்களைச் செல்லப் பிள்ளையாகத் தத்தெடுத்துக் கொண்டது போல, மார்பிலும் மடியிலும் வைத்துக் கொண்டு கொஞ்சி. சத்தமாக மூத்தமிட்டுக் களிக்கும் பெண்மணிகளை இன்னும் நாம் அன்ருட வாழ்க்கையில் சேந்திக்கிறேம். இந்த வேடிக்கையும் வினேதமும் அன்றே நிகழ்ந்துதான் இருக்கின்றது. பணக்கார ஆண்கள் மட்டுந்தான், இத்தகைய பைத்தியக்கார விளையாட்டுக்களில் ஈடுபட்டனரா என்றால், இந்த நாய் விவகாரத்திற்குப் பிறகு. பெண்களும் முழு மூச்சாக பங்கு பெறத் தொடங்கினர். 1870ம் ஆண்டிற்குப் பிறகு நாய்ப் பந்தயத்தையும் தொடங்கி விட்டனர். கண்காட்சியாக அல்ல; நாயின் ஓட்டப்பந்தயமாகத்தான்.

நல்ல ஜாதி நாய்களைத் தேர்ந்தெடுத்து, நன்றக வளர்த்து, அவைகளை ஓட்டப் பந்தயத்திற்குத் தயார் செய்த பெண்ணழகிகள், வீதிகளின் இரு புறமும் மொய்த்து நின்று நாய்களை ஓடவிட்டும். ஓட்டியும், ஓட்டப் பந்தயங்களே நடத்தி இன்பம் கண்டனர். பெண்களின் நெஞ்சம் நாய்களின் ஓட்டத்தைப் பார்த்து மகிழ்ந்தது என்றால் ஆண்கள் அவ்வாறு மகிழமுடியுமா? அவர்கள், அதற்குமேல் ஒரு படி சென்றுதானே அனுபவிக்க முடியும்? ஆமாம்! ஆண்மை மிகுந்தவர்கள் அல்லவா அவர்கள். அவர்கள் செயலில் ஆண்மை குடிகொண்டிருக்க வேண்டாமா? அவர்களும்