பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


51 வேண்டும். ஆடப் பயன்படுகின்ற பந்து சரியான அளவு காற்றடிக்கப்பட்டிருக்கின்றதா என்பதைத் தேர்ந்து, மூன்று பந்துகளே அதுபோல் தெரிவு செய்யவேண்டும். விளையாடும் வீரர்களைக் கண்டு, அவர்கடளுன் உரையாடி. விதிமுறைகளை இயல்பாக விளக்கி, தான் ஆற்றப்போகின்ற பணி பற்றிக் கூறி, அவர்கள் எவ்வாறு தம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள் கின் ருர் நடுவர். இதற்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆகும் என்பதையும் நாம் உணர்ந்து கொள் ளவேண்டும். விளையாட்டுக்களை வளர்த்து, நாட்டோரை நல்லின்பத் தில் ஆழ்த்தியும். நலமுள்ளோராக ஆக்கவும், பலம் நிறைந் வதர்களாக மாற்றவேண்டும் என்ற மாபெரும் பணியென்று தான் அவர்கள் உழைக்கின் ருர்கள். வருமானந் தான் குறியென் ருல், அதற்கு இதுதான் வழியென் ருல், இதைத் தேர்ந்தெடுப்பவர்களின் அறிவையே சந்தேகிக்க வேண்டி இருக்கும். இத்தகைய அரிய தொண்டுள்ளம் கொண்டுள்ளவர்கள், ஆட்டத்தினை சிறந்த முறையில் நடத்தித் தரவேண்டும் என்றுதான் நடுவர்களாக வருகின்றனர். ஆயிரமாயிரம் ரசிகர்கள் மத்தியிலே ஒடித்திரிந்து பணியாற்றும் பொழுது, தவறு நிகழும். நிகழத்தான் செய்யும். தவறிழைத்தல் மனித சுபாவம்தான். ஆளுல் வேண்டுமென்றே தவறு செய்து, ஒரு குழுவைத் தாழ்த்தி வீழ்த்திவிடவேண்டுமென்ற, எண்ணத்தின் விகள வல்ல அது. ஆயிரத்தில் ஒருவராக ஆடுகளத்தில் நின்று, அரசியல், வாதிகள் போல் தங்களின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுப் பதில், நடுவர்கள் தவறு செய்வதில் கல. அவர்கள் எடுக்கின்ற முடிவுகள், கொடுக்கின்ற தீர்ப்புக்கள் எல்லாம் குறைந்தது. 10.க்கு 9 சிறந்தவராகவும் தகுதியானதாகவுமே இருக்