பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


を 9 ஆடுகளம். எப்படி அமைய வேண்டும் ? ஆடுதற்குரிய விதிகள் என்னென்ன ? வழி முறைகள் எவ்வாறு என்றெல் லாம் புத்தகமாக அச்சிட்டு விற்றதோடு, ஆட்டத்திற்குத் தேவையான வலை, மட்டை, கம்பங்கள், ஆணிகள், கயிறுகள் அத்தனேயையும் உண்டாக்கி, விற்றுத் தன் விளையாட்டை விருத்தி செய்த வேளையில்தான் அமெரிக்கக் குமரி வந்து ஆட்டத்தில் ஒன்றிக் கலந்து பொருட்களை வாங்கிச் சென்று, சங்க இலாகாவைச் சிக்கலில் ஆழ்த்திய நிகம்ச்சியை முன்னரே கண்டோம். புதிய ஆட்டம் பொங்கிய பெரு வெள்ளமாக மக்க வளிடையே பாய்ந்து பரவத்தொடங்கியது. செல்வம்கொழிக் கும் சீமான்கள், சீமாட்டிகள், பிரபுக்கள் மட்டுமல்ல, ஆட்சி செய்யும் இளவரசர்கள், கோமான்கள் அனைவரும் கூடிக் கொண்டு ஆடி மகிழ்ந்திடும் அளவக்க இந்த ஆட்டம் விரைவாக வளர்ந்தது, ஓராண்டு முடிவதற்குள்ளேயே புதிய விதிகளைப் புகுத் தினர் மேஜர் என்ருலும், வளர்ந்து வரும் விகளயாட்டை அவரால் கட்டுப்படுத்த முடியவில்ல. அவரவர் விருப்பம் போல் விதிகளை மாற்றிக்கொண்டும், ஆடும் இடங்களைத் தேவையான அளவுக்கு அமைத்துக்கொண்டும் ஆடி மக்கள் மகிழ்ந்தார்களே தவிர, மேஜர் கூறிய விதிகளை எவரும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. எதிர்மாற்றம் கூறவும் இல்லை. டென்னிஸ் ஆட்டம் வளரத் தொடங்கியவுடனே, முன்பிருந்த விளையாட்டுக்கள் பல, முன் நிற்க முடியாமல் மறைந் தொழிந்தன, ஆட்டத்தில் பந்து வேண்டுமல்லவா ? துணித் துண்டு களைச் சுருட்டிக் கொண்டு அதை நூலால் தைத்துப் பந்தாக்கி முதலில் ஆடினர். அது துள்ளவில்லை. தரையை விட்டுக் கிளம்பவில்லை என்ற குறையிருக்கவே, தோலால் ஒரு பை செய்து, அதற்குள் பறவையின் சிறகுகளையும் பஞ்சு நூல்களை