பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. உடற்பயிற்சித் துறையும்
உலகத்தார் குறையும்

உடலைத் திறமாகவும். தரமாகவும், நிறமாகவும், நலமாமவும், நாள் முழுதும் வளமாகவும் வைத்துக்கொள்ள மேற்கொள்கின்ற அரிய முயற்சியைத்தான் உடற்பயிற்சி என்கிறோம்.

உடற் பயிற்சியின்போது, இயற்கையாக உடல் உறுப்புக்கள் பெறுகின்ற இயக்கத்தில் ஒரு லாவகமும், விளையாடும்போது பெறக்கூடிய அதிக உற்சாகமும், வேலை செய்யும்போது பெறகின்ற கடமையுணர்வும் காரிய சித்தியும் கைமேல் பலனும் கிடைக்கின்றது என்பதால்தான், உடற் பயிற்சியை உலகத்தார் போற்றுகின்றனர், ஏற்றுகின்றனர். பாராட்டிப் பரவசப்படுகின்றனர்.