பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


9. உடலும் ஒரு தெய்வமே ! W உச்சி வெயில் உலகை ஆண்டு கொண்டிருந்தது. ஆவி பறக்கும் தணலிலும், அடி சுடும் மணலிலும் வறுக்கப்பட்ட ஒரு வழிநடைப் பயணி, பெருமூச்சைப் பெருக்கியபடி நடந்து வந்தான். உடல் நனைந்தது வியர்வையால், உள்ளம் அழுதது வேதனையால். ஒய்வெடுக்க ஏதேனும் இடம் கிடைக்குமா என்று ஏங்கித் தவித்தது இதயம். பார்க்கக் கூசிய கண்கள் படபடத்தன. கண்ணுக்கெதிரே ஒரு காட்சி, கிளைகளும் தழைகளும் செழித்து நின்ற ஒரு மரம் தலையாட்டி இவனை வரவேற்பது போல அசைந்தாடியது. தென்றல் தேடி வந்து அவனது தேகத்தைத் தழுவி, தடத்தைக் காட்டி அழைத்துச் சென்றது. நிழலும், நிழல் தந்த சுகமும், தென்றலின் குளுமையும் அவனது தேகத்தைத் தாலாட்டிக் கொண் டிருந்தன. நிழல் வருமா, நிம்மதி தருமா என்று ஏங்கிய நெஞ்சின் நில மாறியது. நாவுக்குச் சுவையாக ஏதேனும் அறுசுவை