பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. வழிகாட்டும் விளையாட்டு வாருங்கள் விளையாடி மகிழ்வோம்! இன்ப வழிகாட்டும் விளையாட்டை நீரும் ஆடிப் பாருங்கள்! பலகோடி மக்கள் பெற்றார்! பலநூறு ஆண்டுகளாய் ஆடி இன்பம்! சேருங்கள் அவர் வழியில்! சேர்ந்து ஆடித் தீருங்கள் மனத்துன்பச் சுமையை எல்லாம்! நீருங்கள் வாழ்வினிலே நினைத்திடாத நிம்மதியைப் பெறவேண்டின் துணையாய் கொள்க விளையாட்டைப் பாடுகின்றேன்! வாழ்வில் நம்மை விதியோடு வழிநடத்தும் என்ப தாலே! விளையாட்டைத் தேடுகின்றேன், தினமும் நம்மை விழிப்போடு காத்திருக்கும் என்ப தாலே? விளையாட்டை ஆடுகின்றேன் மனதில் இன்பம் விளைகின்ற வயலாக்கும் என்ப தாலே! வளைகின்ற உடல் தம்மை வைர மாக்கி வழிகாட்டும் சுவை ஊட்டும் என்ப தாலே! ஆண்டவனை விளையாட்டுப் பிள்ளை என்றே அனைத்துலக இலக்கியங்கள் அழகாய் சொல்லும். ஆண்டிமுதல் அமைச்சர் வரை ஆண்பெண், பிஞ்சு அரைக்கிழங்கள் முழுக்கிழங்கள் எல்லாம், நெஞ்சில் மூண்டெழுந்த விளையாட்டு உணர்ச்சியாலே முன்னெழுந்து விளையாடி மகிழ்ந்து வாழ்ந்த நீண்டெழுந்த வரலாற்றை நினைவில் கொள்வோம்! நிலையில்லா இவ்வுலகில் நிலைதான் ஈதே!