பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45


ஆகி சிறப்பாகப் பயன்படுகிறது என்பதையும் நாம் அறிந்து மகிழ்வதுடன், ஆட்ட அமைப்புக்கு சொல் வந்த அழகையும் உணர்ந்து இன்புறு கிறேம்.

13. சதுரங்கம் (chess)

சதுரங்க ஆட்டத்தின் வரலாற்றை ஆராயப் புருவோமானுல், எத்தனையோ கதைகள் நிகழ்ந்தன வாக, கற்பனையாகவோ அல்லது சரித்திரப்பின்னணி அமைந்தனவாகவோ இருப்பதை நாம் காணலாம். (ஆரியரின் 'சதுரங்கம் விளையாடுவது எப்படி' என்ற நூலில் முழு வரலாற்றினைக் காணவும்.)

நாம் அறிகின்ற அத்தனைக் கதைகளிலும் நிகழ்ச்சிகளிலும் உலவுகின்ற மாந்தர் அனைவரும் அரச்ர்கள், அரசிகள், அமைச்சர்கள், சேனைத் தலைவர்கள், மதகுருக்கள், மற்றும் அரசருடன் நெருங்கிய தொடர்புள்ளவர்கள். அதனல் தான் இதனை 'அரச பரம்பரையினரின் ஆட்டம்' என்கின்றனர்.

உலகமெங்கனும் ஆடப்படுகின்ற இந்த ஆட்டம் பல பெயர்களில் உலவி வந்திருக்கின்றது.