பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 வெறுங்கட்டை போன்ற நீண்ட மட்டையால் பந்தினை அடித்தாடும்பொழுது, வேண்டிய அளவு பந்து உயரத்தில் செல்லாமலும், விரைவாகப் போகாமலும் இருந்ததால், ஆடியவர்களுக்கு அது உற்சாகமாக இல்லை. எனவே, அதற்கு ஒரு உபாயம் கண்டுபிடித்தார்கள். தடுப்பு போன்ற அமைப்புள்ள தலைப்பாகத்தில் உள்ள பலகையின் நடுப்பகுதியை மட்டும் வெட்டி யெறிந்து விட்டு, அதனை நூல் கயிறு அல்லது மென் கயிறு போன்றவற்ருல் குறுக்கும் நெடுக்குமாக, சிலந்திவலை பின்னுவது போல பின்னிக் கோர்த்துக் (Strings) கொண்டு அடித்தாடத் தொடங்கினர். அந்தநூல் பகுதியில் பந்து பட்டுத் தெறித்தபோது, அவர்களுக்கு ஆனந்தமும் தெறித்து எழுந்தது. வெறும் நூல் கயிற்றில் தொய்வு ஏற்பட்டதும் விரைவில் அறுந்து போவதற்குரிய நிலையும் இருந்த தால், காலக்கிரயத்தில் நைலான் நூலினைப் பயன் படுத்தத் தொடங்கினர். இவ்வாறு பந்தினே அடித் தாடப் பயன்படுத்திய மட்டையை அவர்கள் ‘ராக்கெட்' என்று அழைத்தனர். அதற்குக் காரணம் இருக்கத்தான் இருந்தது. அரேபிய மொழியில் ராகட் (Rahat) என்ற ஒரு சொல் உண்டு. அதற்கு உள்ளங்கை என்பது பொருளாகும். முதன்முதலாக உள்ளங்கையால் பந்தை அடித்தாடியதைக் குறிக்க இந்த ராகட்