பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67

என்ற ,சொல் வந்திருக்க வேண்டும் என்றுஆராய்ச்சியாளர்கள் அபிப்ராயப்படுகின்றனர்.

ராகட் என்ற இந்த அரேபியச் சொல்லை, ஜெர் மானியர்கள் ராக்கென் (Rachen) என்று சொல்லி அழைத்திருக்கின்றனர். அதனை ஆங்கிலேயர்கள் ராக்கெட் (Rachet) என்று உச்சரித்து இருந்திருக்கின்றனர். அந்த அடிப்படையில்தான், டென்னிஸ் ஆட்டத்தில் பயன்படுகின்ற மட்டைக்கு ராக்கெட் என்னும் பெயர் வந்திருக்கிறது என்றும் கூறுவர்.

பூப்பந்தாட்டம், இறகுப் பந்தாட்டம், மேசைப் பந்தாட்டம் போன்றவற்றில் பயன்படுகின்ற மட்டைக்கு (Bat) ராக்கெட் என்ற பெயரே அமைந்துள்ளன. நீண்ட கைப்பிடியும், தலைப்பாகத்தில் துடுப்புப் போன்ற அமைப்பிலிருந்துதான் இவைகள் மெருகேறி வந்திருக்கின்றன என்பது நமக்கு நன்றாகப் புரிகிறது.

மட்டையும், நம் கையமைப்பும் அப்படித்தானே அமைந்திருக்கின்றன! முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை நீண்ட கைப்பிடி போலவும், உள்ளங்கைப் பகுதி துடிப்பு போலவும் அமைந்திருப்பது, அவர்களுக்கு ஒர் புதிய உணர்வினை ஏற்படுத்த, இப்படி ராக்கெட்டுகள் அமையக்காரணமாக இருந்திருக்கலாம் எ ன் று ம் நம்ப இடமிருக்கிறது அல்லவா!