பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விளையாட்டுச் சிந்தனைகள் I 5

அது போலவே, விளம்பரமும் முடிந்தவரை தான் மேலே ஏற்றும். அதற்குப் பிறகு அங்கேயே நிற்க முடியுமா? திறமையில்லாத விளம்பரப் புகழ், வெகு விரைவிலேயே மண்ணுக்குக் கொண்டு வந்து மட்டந்தட்டி விடும். எதிர்ப்பும் விளையாட்டும்

எதிர்த்து அடிக்கின்ற காற்றில் பாய்ந்து பாய்ந்து, புகுந்து புகுந்து தான் பட்டம் மேலேறும். அது போலவே தான், விளையாட்டுத் திறமையும் எதிர்ப்பிலே தான் மேலேறும் மெருகேறும். காற்ற டிக்கிறது என்று படுத்துக் கொண்டால் அது பட்ட மல்ல, மட்டம் அதுபோலவே எதிர்ப்பு இருக்கிறது என்று ஒய்ந்துபோகின்றவன் வீரன் அல்லன். அவன் சோரன் ஆகிடுவான்.

எதிரிகள் இல்லாத மனிதன் யாருமே இந்த உலகில் இல்லை. எதிர்ப்பவர்களைப் பற்றிக் கவலைப் படாமல், தன் காரியங்களைக் கருத்துடன் செய் பவனே, வெற்றி பெறுகிருன் லட்சியத்தையும் எளிதாக அடைகிருன்

விளையாட்டிலும் எதிரிகள் உண்டு. எதிர்த்து ஆடுவதால் மட்டுமே அவர்களை எதிரிகள் என்று எண்ணிவிடக் கூடாது. பெருந்தன்மையுடன் விளையாட வேண்டும். அப்பொழுது பெறுத்தன்மை யில் இனிமை மட்டுமல்லாது, புனிதமும்கிடைக்கும் திறமையும் வெற்றியும்

வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு விளையாட முயற்சி செய்யக் கூடாது. விஷயங்களை