பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


எஸ். நவராஜ் செல்லையா 2.5

நினைப்பும் நடப்பும்

விளையாடுகின்ற நேரத்தில், நான் நன்ருக ஆட வேண்டும்' என்ற நினைப்புடன் ஆட முயல் பவருக்கு,இருக்கும் திறமையில் இன்னும் மெருகே றும். ஆட்டம் பொலிவுடின் புது வெள்ளமாக வரும்.

தன்னை மறந்து பிறரைக் கெடுத்து ஆட வேண் டும் என்ற எண்ணத்துடன் ஆட முயல்பவருக்கு, உள்ள ஆட்டத் திறமையும் உருக்குலேந்து போய் விடும். பிறரதுஏச்சுக்கு ம்பேச்சுக்கும் ஆளாக நேரிடும். பிறருக்குக் குழி பறிக்க நினைக் கும் போது, அந்தக் குறியால் தாமே விழ நேரிடுகிறது என்பதுதான் உலகம் காட்டி வரும் உண்மை ரகசியமாகும்

தானே தலைவனும் பகைவனும்

குதிரையை இழுத்துக் கொண்டு தண்ணிர் தொட்டி வரையில் போகலாம். ஆல்ை, குதிரையை மிரட்டித் தண்ணிரைக் குடிக்கச் செய்து விட முடியாது குதிரை விரும்பி, தானே தண்ணிரைக் குடித்தால் தான் உண்டு.

அதுபோல, என்னத்தான் போதித்தாலும், துன்புறுத்தித் தூண்டி விட்டாலும் கூட, விளையாட் டில் ஈடுபட்டவர்கள் தாங்களே தன்னிச்சையாகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டால்தான் உண்டு. இல்லையென்ருல் தூண்டுதலும் அறிவுரையும் அவர் களே என்ன செய்யும்? ஒருவர் முன்னேற அவரே முயன்ருல்தான் உண்டு தன்னைத் தலைவனக்குகின்ற

வி சி- 2