பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விளையாட்டுச் சிந்தனைகள் 27

எல்லாவற்றையும் ஆராய்ந்து செயல்படுகின்ற பொழுது, எந்தவிதமான முடிவையும் ஏற்றுக்கொள் கின்ற மனப்பக்குவம் தானே வந்து விடுகிறது. முடிவைப் பற்றித் தொடக்கத்திலேயே முடிவெடுத் துக்கொள்வது, பல குழப்பத்திற்கு ஆளாக்கி விடும்.

போற்றுதற்குரிய திறமை

விளையாட்டில் கலந்து கொள்வதற்குரிய சிறந்த திறமை எதுவென்ருல், விபத்து ஏதும் ஏற்பட்டு விடாமல் பத்திரமாக ஆடி முடித்துக் கொள்வது தான் அபாயம் வரும் வழிகளையெல் லாம் தவிர்த்துவிட்டு ஆடுவது என்பதற்கு எவ்வளவு சாமர்த்தியம் வேண்டும் தெரியுமா?

உடலும் ஒரு புல்லடர்ந்த மைதானமும்

புல்லால் போர்த்தப்பட்டிருக்கும் மைதானம் பார்க்க அழகாக இருக்கும். அதில் தினந்தோறும் ஆடிக்கொண்டிருந்தால், ஆடுகளத் தரையும் சுத்த மாக இருக்கும். ஆடுவதற்கும் தரை பதமாகவும் இதமாகவும் இருக்கும். ஒரிரு நாட்கள் மைதானத் இல் ஆடாமல் விட்டு விட்டால், ஆடுகளம் புல் முளைத்துக் கிளைத்துப் போய்விடும். வேறு பல செடி களும் தோன்றத் தொடங்கி விடும். ஆடப் பயன் படாமல், பிறகு சுத்தம் செய்தால்தான் பயன்படும் என்ற நிலைமைக்கு வந்துவிடும்.

அதுபோல் தான் நம் உடலும் விளையாட்டுப் பயிற்சியும். தொடர்ச்சியாக ஒரிரு நாட்கள் பயிற்சியை விட்டு விட்டால் கூட, உடல் தன்னிலை