பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


28
விளையாட்டுச் சிந்தனைகள்
 


மாறிவிடும். பயிற்சியால் பெற்றிருந்த திறன்களில் (Skills)மெருகு குறையத் தொடங்கி விடும். ஆகவே, பயன் படும் உடலும், புல் போர்த்திய மைதானமும் தினமும் பயன் படுத்தப் பட்டால் தான், பலமாக வும் இருக்கும். பொலிவாகவும் இருக்கும்.

வாழ்க்கையின் பிரதிபலிப்பு

விளையாட்டு என்பது வாழ்க்கையின் பிரதிபலிப் பாகும். இயற்கையின் இனிய இயக்கங்களைப் போல, உடலை இதமாக இயக்கி, அடிப்படையான இயக்க உணர்வுகளை ஊக்குவிக்கின்றன. உற்சாகப் படுத்துகின்றன. வாழ்க்கையில் நல்ல மேம்பாடி டைய, விளையாட்டில் மேம்பாடடைந்தால் போது மானது. கசடறக் கற்றதை கனிவாய் பயன்படுத்து பவர்தானே கெட்டிக்காரர் ஆவார்!

இலவச இன்பம்

விளையாட்டில் மேம்பாடு பெறுவது என்பது நீண்ட பயணம் போன்றது. அந்தப் பயணத்திற். காக ஆயத்தம் செய்வது என்பதில் அலாதியான மகிழ்ச்சி வருகிறது. புறப்படும் போது பொங்கி வரும் புளகாங்கிதம், புரிந்து ஆடும் பொழுது நீங்காத இன்பம், கற்றுக் கொண்ட பிறகு வரும் கனிவான திருப்தி, முடித்துவிட்டு வரும் பொழுது முகிழ்க்கின்ற சுகம்.

தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து கிடைக் கின்ற இன்பமும் திருப்தியும் வாழ்க்கையில் வேறெங்கு கிடைக்கும்! வாழ்க்கையில் வேறென்ன.