பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46
விளையாட்டுச் சிந்தனைகள்
 


அதுபோலவே, வாழ்க்கை எனும் வெள்ளத்தில் வலிமையான தேகமான நல்ல படகு தான் விரைந்து முன்னேற முடியும், மிதந்து கரை சேர முடியும்.

கரையும் விதியும்

கரைகள் உள்ள கால் வாய்களில் ஒடும் நீர், கழனிக்குத் தப்பாது சென்று பயிரை விளைவிப்பது போல, விதிகளுக்கடங்கிய விளையாட்டு நிகழ்ச்சி களே வளமான இன்பத்தை - ஆடுவோருக்கும், விளையாட்டுக்களில் விருப்பம் உள்ளவர்களுக்கும் விளைவிக்கின்றன.

உண்மையான உடற் பயிற்சி

உடற் பயிற்சியானது உடலைக்காக்கும் அற்பு தத் துணைவன். உடலை சீரான முறையிலே செதுக்கும் உயர் தரச் சிற்பி. அரிய முறைகளை எளிய வழியிலே கற்றுத்தரும் அறிவார்ந்த ஆசிரியர். வைத்தியர் களால் கைவிடப்பட்ட நோய்களைக் கூட வரிந்து கட்டிக் கொண்டு நோய்களை தீர்த்து வைக்கின்ற மருத்துவர். முக்கியமான மூன்று

வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவை என்று மூன்றினைக் கூறுவார்கள். அது வயிருர உணவு. விருப்பத்திற்கேற்ற உடை. வசதியான வீடு. இதில் எது குறைந்தாலும் அல்லது கிடைக்காமற் போன லும் கவலையும் துயரமும் ஆட்டிப் படைத்து விடும்.

மனிதனுக்கும் மிகவும் இன்றியமையாத தேவை. உடலுக்குத்தான். அழகு. ஆண்மை.