பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54
விளையாட்டுச் சிந்தனைகள்
 


வெந்தும் வேகாத சோறு போல. அதனைச் சாப்பிட் டால் வயிற்று வலிதான் மிகுதியாகும். அதைப் போலவே, விளையாட்டு ஒன்றில் அரை குறை அறிவுள்ளவர் மிகவும் ஆபத்தானவராவார். எந்த நேரத்திலும் அவரால் எதுவும் நடக்கும்!

இரக்கமுள்ள நடுவர்

விளையாட்டுப் போட்டிகளுக்கு நடுவராக விளங்குபவர் விதிகளில் கெட்டிக்காரராக மட்டும் விளங்கி விட்டால் போதாது. அவர் விளையாட்டைத் திறம்பட நடத்தித் தருவதில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவராகவும் இருக்க வேண்டும். ஏனெனில், அவர் இரக்கமுள்ளவராக இருக்கக் கூடாது. இரக்கமுள்ள மனம் விதியை மாற்றவும், மனிதர் களின் தவறை மறைக்கவும் முயலும்; தவறினைத் தண்டிப்பதில், விதியை மீறுபவரைக் கண்டிப்பதில், நடுவர் கொடுமையானவராக, கொடுங்கோலராக இருக்க வேண்டும். இல்லையேல், இரக்கமுள்ள நடுவர் எடுப்பார் கைப்பிள்ளைப் போல ஆகிவிடு வார். ஏனெனில், வாய் பேசாது இருப்பவரை விதிகள் அடக்கி விடும். வாயாடிகளிடம் விதிகள் அடங்கிவிடும். ஆகவே, நடுவர் விதிகளைப் பின் பற்றும் போது இரக்க முள்ளவராக இருக்கவே

கூடாது.

குதிரையும் உதைக்கும்

எதிர்க்குழு ஆட்டக்காரர்கள் அமைதியாக நடந்து கொள்வதை ஒரு சிலர் அவர்களை ஏமாளி கள் என்று எண்ணி, ஏறி மேய்வதும் உண்டு.