பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/57

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


56
விளையாட்டுச் சிந்தனைகள்
 


படுத்தியும் வாழ்வதே பகுத்தறிவுடைய மனித குலத்திற்கு அழகாகும்.

பிறவியும் திறமையும்

திறமையானது பிறவியிலே கிடைக்கிறது. கிடைத்து விடுகிறது என்ருலும், அந்தத்திறமையை அறிவுக்கூர்மையுடன் பயன்படுத்தி மெருகூட்டினல் தான், திறமை மிளிரும். ஒளிரும். உலகமும் அந்தத் திறமையை வாழ்த்தும். வணங்கும். இல்லை யேல் நாய்க்குக் கிடைத்த தேங்காய் போல் திறமை, யாருக்கும் பயன் படாமல் ஒழிந்து போகும். அது கண்ணில்லாதவன் பெற்ற அழகான சித்திரம் போல பயனழிந்து போகும்.

நாடும் வீடும்

ஒயாமல் உழைத்து, ஒப்பற்ற விளையாட்டு வீரராக உருவாகி உலகப்புகழ் பெறுகிருர் ஒருவர் என்ருல், அந்தப்புகழ் அவரோடு மட்டும் நின்று போய் விடுவதில்லை. இவர் பெற்ருேர் இவரைப் பெற என்ன தவம் செய்தார்களோ' என்று பெற் ருேரையும் உலகம் போற்றும். அவருக்கு வழிகாட்டி வாழ்வமைத்துத் தந்த ஆசிரியரையும் மதித்துப் போற்றும். அவர் பிறந்த பொன்டுைம் அவரால் பெருமை பெறுகிறது. வீடும் நாடும் ஏடும் புகழ் பெற, புகழ்தர வைக்கும் பெருமையை ஒவ்வொரு இளைஞனும் பெறமுயன்ருல், நம் பாரதம் எவ்வளவு தலை சிறந்து திகழும் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது ஏற்படுகின்ற இன்பம், உண்மையாகக் கிடைக்குமானல் ...... கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்! s