பக்கம்:விளையாட்டுச் சிந்தனைகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78
விளையாட்டுச் சிந்தனைகள்
 


தன்னைத் தகுதியுடையவராக மாற்றிக் கொள்ள வும் கூடிய செயல் முறைகளை உண்டு பண்ணுவதம் காகத்தான்.

தனக்கு எல்லாம் தெரியும்' என்று தலைக் கனத் துடன் பேசுவது, அது நிலை மாறி வீழ்வதற்குரிய வழியாகும். தலைக்கணம் தற்பெருமைக்கு உள் ளாக்கி, உள்ள அறிவையும் உள்ளிருந்தே அரித்து விடும். அறிவில்லாமல் பேசுபவன் அவமானத்திற்கு ஆளாகி விடுகிருன்.

'தனக்கு எல்லாம் தெரியும். மற்றவர்க்கு எதுவும் தெரியாது. என்று பேசத் தொடங்கி விட்டால், அவனைக் கெடுக்க வேறு எதிரியே வேண் டாம். அவன் பேசத் தொடங்கி விட்டாலே, புற்றி சல் போல பகைவர்கள் கிளம்பி விடுவார்கள்.

இன்று நம் விளையாட்டுத் துறையில் தன்னை உயர்த்தி பிறரைத் தாழ்த்தும் சொல்லும் செயலும் சற்று அதிகமாகி இருப்பது போல் தோன்றுகிறது. அதல்ை எழுகின்ற உட்பூசலும், வேலைக் குழப்பமும் விரிவடிைந்து விடுவது போலவும் தெரிவதை, பார் வையாளர்களும் சுட்டிக் காட்டுகின்ருர்கள்.

ஒற்றுமை யானதுபேச்சோடு நின்று விட்டால், காகிதத்தில் சர்க்கரை என்று எழுதி உண்பதுபோல் தான். பண்பாடு என்பது மனிதர்களிடையே பழக்கத்திலும் வழக்கத்திலும் வர வேண்டும்.

உனக்கும் ஊருக்கும்

'உன் மகிழ்ச்சிக்காக நீ விரும்பிய உணவினைத்

தேர்ந்தெடுத்துக்கொள். ஊரார் மகிழ்ச்சிக்காக