பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78

யும் ஒருவர், பந்தடித் தாடுபவருக்கு முன் எதிர் சுழல் பந்தாகத் தெரிவது போல எறிந்து (Off Break) அதே சமயத்தில் கால் ஒரத்தில் சுழன்று செல்லும் தன்மையில் (Leg Break) எறி வதைத்தான் ஏமாற்று சுழல் பந்தெறி என்று கூறுகிறோம்.

இதை முதன் முதலில் பரிட்சார்த்தமாக எறிந்து வெற்றி பெற்ற ஆரம்ப எறியாளர் என்ற பெருமையைப் பெற்றவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த B.J.T. போசன் குவெட் (Bosan Ouet) என்பவர். இந்த எறிமுறைக்கு முதலில் ஆட்டமிழந்தவர் (1900ல்) S கோ (Coe) என்பவர்.

14. பந்தைத் தொட்டாடுதல் (Handled Ball)

பந்து ஆட்டத்திலிருக்கும் பொழுது, பந்தடித்தாடும் ஒரு ஆட்டக்காரர் பந்தைத் தொட்டால், அவர் பந்தைக் கையால் தொட்டாடினார் என்ற தவறுக்கு ஆளாகி, அதனால் ஆடும் வாய்ப்பை இழந்து, வெளியேற நேரிடும்.

பந்தாடும் மட்டையைப் பிடித்திருக்கும் கையானது மட்டையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. தான் ஆடிய பந்தை இரண்டாவது முறையாக ஆடினாலும் தவறுதான். அதுபோலவே கையால் தொட்டாலும், அது ஆட்டழிழந்து வெளியேற வைத்துவிடும்.

ஆனால், எதிர்க் குழுவினர் விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டால், அந்தப் பந்தை அவர்கள் பக்கம் தள்ளிவிடலாம்.

பந்தைக் கையால் தொட்டாடி இவர் ஆட்டமிழந்தார் என்று ஆட்டக் குறிப்பேட்டில் குறிக்கப்படும்.