பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
79


15. மூன்று விக்கெட்டைத் தொடர்ந்து வீழ்த்துதல் (Hat Trick)

எதிர்க்குழு பந்தடி ஆட்டக்காரர்களை நோக்கிப் பந்தெறியும் ஓர் ஆட்டக்காரர், எதிர்க் குழுவின் மூன்று ஆட்டக்காரர்களைத் தொடர்ந்து ஒன்றின்பின் ஒன்றாக வீசும் மூன்று பந்தெறிகளாலும் ஆட்டமிழக்கச் செய்வதைத்தான் இப்படி அழைக்கிறோம்.

ஒரு பந்தெறி தவணையில் (Over) தொடர்ந்து வீசுகின்ற ஒவ்வொரு பந்திலும் ஒவ்வொருவராக மூன்று வீச்சுக்களில் மூன்று பேர்களை ஆட்டமிழக்கச் செய்வதாகும். இது ஒரே போட்டி ஆட்டத்தில் நடைபெற வேண்டிய அரிய திறனாகும்

16. பந்தை இருமுறை ஆடுதல்(Hit the Ball Twice)

ஒரு பந்தடித்தாடும் ஆட்டக்காரர், பந்தெறியாளர் எறிகின்ற பந்தை எதிர்த்தாடி அதாவது தன்னுடைய உடல், மட்டை அல்லது உடையில் பட்டு விழுந்தப் பந்தை, மீண்டும் வேண்டுமென்றே அடித்தாடினால் அதைத் தான் பந்தை இருமுறை ஆடுதல் என்று கூறுகின்றார்கள்.

இன்னும் விளக்கமாகக் காண்போம். பந்தெறி மூலமாக வருகின்ற பந்தை அவர் முதலில் அடித்தாடி விடுகிறார். ஆனால் அந்தப் பந்தானது அதிக தூரம் போகாமல், அவருக்கு அருகிலேயே கிடக்கிறது. அதை எட்டிப் போகுமாறு அனுப்பிவிட வேண்டும் என்பதற்காக, மீண்டும் அந்தப் பந்தை அவர் வேண்டுமென்றே அடித்தாடுகிறார். அதைத் தான் பந்தை இருமுறை ஆடுதல் என்கிறோம். இதற்குரிய தண்டனை அவர் ஆட்டமிழந்து போகிறார்.

17. தானே விக்கெட்டை வீழத்துதல் (Hit Wicket)

எதிர்க் குழு ஆட்டக்காரரின் பந்தெறியை எதிர்த்து ஆடிட நிற்கும் ஒரு பந்தடி ஆட்டக்காரர், தான் அந்தப்பந்தை