பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

 பொருள் கூறுகின்றார்கள். அதாவது, சுவர்களுக்குள்ளே என்பதுதான் இதற்கு உண்மையான பொருளாகும்.

ஒரு கட்டிடத்திற்குள்ளே இருப்பவர்களுக்கு இடையே நடைபெறுகின்ற போட்டியைக் குறிப்பதற்காகவே இந்த சொல்லை உருவாக்கியிருக்கின்றார்கள்.

சுவர்களுக்கு உள்ளே என்பது போலவே, சுவர்களுக்கும் வெளியே என்று குறிக்கப்படுகின்ற வார்த்தையும் வந்திருக்கிறது. அதாவது பல பள்ளிகளுக்கிடையே, பல நிறுவனங்களுக்கிடையே நடைபெறுகின்ற போட்டிகளைக் குறிப்பதற்காக Extramural என்றும் குறிப்பிடுவார்கள்.



19. ASHES

கிரிக்கெட் ஆட்டத்தில் சாம்பல் (Ashes) எப்படி வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! வரலாற்றுப் புகழ் மிக்க நிகழ்ச்சி ஒன்று, சாம்பலைக் கொண்டு வந்துவிட்டது. கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து மக்கள் எவ்வளவு ஈடுபாடும் இணையற்ற ஆர்வமும் கொண்டு விளங்கினார்கள், விளங்குகின்றார்கள் என்பதற்கு சான்றாகவே இந்த சாம்பல் நிகழ்ச்சி விளங்கி வருகிறது.

இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடக்கின்ற கிரிக்கெட் போட்டியில், எப்பொழுதும் இங்கிலாந்தே வெற்றிபெறும். ஏனென்றால், கிரிக்கெட் ஆட்டத்தின் தாயகமல்லவா இங்கிலாந்து!