பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51




22. CIRCUS

சர்க்கஸ் என்றவுடன், காட்டுமிருகங்களும் , கோமாளிகளின் சேஷடைகளும், மற்றும் கவர்ச்சிகரமான உடையணிந்த கன்னிகளும் தான்நமது நினைவுக்கு வருவார்கள்.

காலப் போக்கில் மாற்றம் பெற்ற இந்த விளையாட்டுக் காட்சிகளுக்கு, முன்னால் இடம் பெற்றிருந்தது தேர்ப் போட்டிகளாகும் (Chariot Races).

வலிமையான குதிரைகள் காற்றினும் கடுகிச் சென்று தேரிழுத்துப் போகும் போட்டிக்கும், இக்கால சாகசப் போட்டி நடத்தும் தன்மைக்கும் சர்க்கஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!

Circus என்ற சொல்லானது, இலத்தின் சொல்லான Circulus என்பதிலிருந்து தோன்றி வந்திருக்கிறது, சர்க்குலஸ் என்றால் சிறிய வளையம் (Ring) என்று அர்த்தம்.

அதாவது, மைய இடத்தில் விளையாடும் வட்டப்பகுதிக்குத்தான் Ring என்றனர். அதே பெயரில் தான் இன்றைய குத்துச்சண்டை மேடைக்கும் அது சதுரவடிவில் இருந்தாலும், Ring என்ற பெயரையே பெற்றிருக்கிறது.

ஆரம்ப காலத்தில், ஒரு வட்டம் போட்டு, அதற்குள்ளே இரண்டு வீரர்களை இருக்கச் செய்து, குத்துச்சண்டை போட்டியை நடத்தினார்கள் ரோமானியர்கள். அதனால்தான் Ring என்று அதனை