பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


அழைத்தார்கள். பின்னர், குத்துச்சண்டை மேடை சதுர வடிவமாக மாற்றியமைக்கப்பட்டாலும், வட்டம் என்பதைக் குறிக்கம் ரிங் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டு, அதுவே பெயராக அமைந்தும் விட்டது.

சிறிய வட்டப் பரப்பை Circulus என்று அழைத்த ரோமானியர்கள், அதைப் போலவே பெரிய பரப்பளவிலும் ரிங்கை அமைத்தார்கள்.

உள்ளே விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவும், அதனைச் சுற்றியிருந்து அனைவரும் பார்த்து ரசிக்கின்ற வகையிலும் பெரிய அளவில் ஏற்படுத்தினார்கள்.

அந்த சுற்றி வளைக்கப்பட்ட அரங்கத்திணை அமைத்தவர் ரோம் நாட்டின் கடைசி மன்னான இளைய டார்க்குனிஸ் (Tarquinius) என்பவர். இவரது காலம் கி.மு. 534-510 ஆகும். இது ஏறத்தாழ 2 இலட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து, பார்த்து ரசிக்கின்ற அளவில் அமைந்த பெரிய விளையாட்டு அரங்கம் ஆகும்.

இதைத்தான் சர்க்கஸ் மேக்சிமஸ் (Circus maximus) என்று பெயரிட்டு அழைத்தனர்.

ரோம் நாட்டிலேயே மிகப்பெரிய கட்டிடமாக அமைந்த இந்த சர்க்கஸ் மேக்சிமஸில், எல்லாவிதமான தேரோட்டப் போட்டிகளும், பெருமைக்குரிய காட்சிகள் எல்லாமே நடைபெற்றன.