பக்கம்:விளையாட்டுத்துறையில் சொல்லும் பொருளும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பளபளப்புள்ளதாக விளங்கியதால், மற்றவர் பார்வையில் பட்டதுடன், பிறருக்கு அறிவிப்புப் பலகை போலவும் தோன்றின. மின்னின! தங்களைப் பற்றிய குறிப்பினையும் மற்றவர்கள் படிக்க உதவியதால், வெள்ளித் தகட்டினையே அதிகமாக மரத்தில் பதித்தார்கள்.

காற்றாலும், கடும் வெயிலாலும், மரப்பலகை போல் அழியாத நினைவுச் சின்னமாக வெள்ளித் தகட்டைப் பதித்து நினைவுச் சின்னத்தை மரத்தில் தோற்றுவித்தப் பழக்கமே, கிரேக்கர்கள் தங்கள் புனித விளையாட்டாக ஒலிம்பிக் பந்தயத்தைத் தோற்றுவித்த போதும் தொடர்ந்து வந்தது.

பந்தயங்களில் வெற்றி பெற்ற வீரர்களைக் கௌரவிக்கவும், அவர்கள் போற்றிக் காக்கும் புனிதச் சின்னமாக வைத்திருக்கவும் அவர்கள் பரிசளித்தனர். அது வெள்ளித் தகடாக இல்லாமல், புனித ஒலிம் பியாவில் விளைந்த ஆலிவ் மரத்தின் இலை தழைகளால் ஆன மலர்வளையமாக இருந்தது.

அத்துடன் மட்டுமல்லாமல் , ஒலிம் பிக் பந்தயங்களில் வெற்றிபெற்ற ஒரு வீரன், தன்னுடைய தாய் நகரத்துக்குத் திரும்பி வந்தவுடன், தான் பெற்ற வெற்றியை நினைவு படுத்துவதற்காக, நினைவுச் சின்னம் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு விதியும் இருந்தது.

நினைவுச் சின்னம் எழுப்பலாம், அல்லது மரத்தில் வெள்ளித் தகட்டைப் பதிக்கலாம். அல்லது