பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

கொண்டிருந்தபோது, பஞ் சராகி விட்டது. பஞ்சர் ஒட்டப் போனபோது, அந்த மனிதன் என் கண்ணில் பட்டு, வணக்கம் தெரிவித்தார். என் இயல்புக்கு ஏற்ப இரக்க மனதுடன் விசாாரித்தேன்.

காரைக் குடியில் நாம் இருவரும் ஒரே ஜிம் மில் உடற்பயிற்சி செய்தோமே! தங்களுக்கு நினைவு இருக்கிறதா என்று விசாரித்தார்.

ஆமாம் என்றேன்.

சைக்கிள் கடை வைத்திருந்தேன். நவrடம் ஆகிவிட்டது. குடும் பத்தில் சண்டை. பிழைப்புக்காக சென்னை வந்து, சைக்கிள் கடையில் வேலை செய்கிறேன். எனக்கு நீங்கள் உதவி செய்தால், நன்றியோடு இருப்பேன் என்று மிகவும், பணிவோடு வேண்டிக் கொண்டார்.

என் வீட்டிற்கு வா என்று, என் முகவரியைக் கொடுத்துவிட்டுச் சென்றேன்.

வரமாட்டார் என்று தான், முகவரியைக் கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால், விதிவிடவில்லை. என்னிடம் விரட்டிக் கொண்டு வந்து, அந்த மனிதரை சேர்த்து விட்டது.

அவருக்கு சோறுபோட்டு, உறங்கவும் இடம் கொடுத்து உபசரித் தேன். தங்கக் கூட இடம் இன்றித் தவித்துக் கொண்டிருந்த அந்த மனிதர், என்னை நன்றாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் போலும்.

தினம் வந்து, எனக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தையும் அழித்தபடி, பேசிக் கொண்டிருந்ததின் விளைவு - சைக்கிள் கடை வைப்பது என்று முடிவாயிற்று.