பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

அன்பர்கள், சைக்கிள் கடைக்கு வருகிற வாடிக்கையாளர்கள், என்னிடம் நேரிடையாகவே கேட்கத் தொடங்கினார்கள்.

அப்பொழுதெல்லாம், எனக்கு ஒரு பாதிரியார் கதைதான் உடனே நினைவுக்கு வரும்.

ஒரு பாதிரியார், அதிகாலைப் பொழுதில் வாக்கிங் போவது வழக்கம். ஒருநாள், காலைக் குளிரில், பாம்பு ஒன்று நடுங்கிக்கொண்டு சுருண்டு கிடந்ததாம். சாவிலிருந்து அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருணையால், அதை எடுத்து, சூடு பண்ணுவதற்காக, அங்கிக் குள்ளே எடுத்து வைத்துக் கொண்டாராம்.

சூடாகிக் கொண்ட பாம்பு, புத்துணர்ச்சியும், புதுத் தெம்பும் பெற்றவுடன், படம் எடுத்துக் கொண்டு, பாதிரியாரின் முகத்துக்கு நேரே வந்து, உன்னைக் கொத்தப்போகிறேன் என்று நின்றதாம்.

இந்தக் கதையை நினைத்துக் கொண்டேன்.

நீங்கள் எழுதவில்லையா இந்தப் புத்தகத்தை என்று கேட்கிறவர்களிடம், பதில் சொல்லவே எனக்கு கூச்சமாக இருந்தது. அவமானத்தால் கூனிப் குறுகிப் போனேன்.

இவ்வளவு உதவிகளையும் என்னிடம் பெற்றுக் கொண்டு, இப்படிப் பேச அவருக்கு எப்படி மனம் வந்தது? எவ்வளவு தைரியம் இருக்கும் ? என்று எண்ணிக் கொண்டு, இவரை என்னிடமிருந்து எப்படி வெளியேற்றுவது என்று யோசிக்கத் தொடங்கினேன்.

ராஜ்மோகன் உடலழகுப் பயிற்சிப் பள்ளியின் முதலாவது ஆண்டு விழாவை சிறப் பாக நடத்தி, அவரைப் பத்திரிக் கைகளில் எல்லாம் பிரமாதமாக எழுதி வெளியிட்டதைக் கூட அவர் மறந்து போனாரே! என்ன செய்யலாம் என்று முனைப்பாக யோசிக்கும் போது, விதிதான்