பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 127

எனக்கு வந்து கைகொடுத்தது.

ராஜமோகன் உடலழகுப் பயிற்சிப் பள்ளியின் 2-வது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்று, அவர் அதிக முயற்சிகளை மேற்கொண்டார். எனக்குத் தெரியாமலேயே, என் பெயரைச் சொல்லி, வசூல் செய்யவும் தொடங்கினார்.

நன்கொடை கொடுத்த நண்பர்கள் கூறிய கணக்குக்கும், அவர் தந்த கணக்குக்கும் பாதி அளவு தான் இருந்தது தெரிய வந்தது. இங்கே, கள்ளக் கணக்குதான் எனக்கு கை கொடுத்து உதவியது. என்னுடன் இருந்த எல்லா தொடர்புகளிலிருந்தும் அவரை நீக்கினேன். அவரை என் முன்னே வரக்கூடாது என்றும் கூறினேன். சைக்கிள் ஷாப்பை, விற்கவும் முயற்சி செய்தேன்.

ஒருவர் வந்து என்னிடம் சைக்கிள் ஷாப்பை அப்படியே வாங்கிக் கொள்வதாகப் பேரம் பேசினார். பத்து சைக் கிள்களுடன் அந்தக் கடையை விற்றேன். அந்த ஆள் என்னிடம் பேசுகிறபோதே, அவர்அவரின் ஆள் என்றும் புரிந்து கொண்டேன்.

என் பணத்தையே நம்பிக் கைத் துரோகம் செய்து சம்பாதித்து, என் சைக் கிள் ஷாப்பையே பினாமி பெயரில் வாங்குகிறாரே என்று தெரிந்து கொண்டு, கொதிக்கும் கனலாக இருந்தேன். என்ன செய்ய?

சைக்கிள் கடையை வாங்கிவிட்ட மதர்ப்பில், என்னிடம் விடைபெற வந்தார் அவர். அவரை அழைத்து, “இதோ பார் தம்பி! என் கடைக்கு இப்போது நீ எஜமான் ஆகிவிட்டாய். என்னை ஏமாற்றிய பணத்தால் வாங்கிவிட்டாய். ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். நம்பிக்கைத் துரோகம் நீண்ட நாள் நிற்காது. கடவுள் உனக்கு நல்ல பாடம் கற்பிப்பார்.

எப்படி நீ ஒன்றுமில்லாமல் சென்னைக்கு வந்தாயோ, அப்படித்தான், நீ ஊருக்குப் போகும் போது, திரும் பிப் போவாய், போ என்று சத்தம் போட்ட பிறகு தான், என் மனம்