பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 4C) விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 149

அதற்குள் நான் அவர்களை சரிகட் விட்டு, வீட்டுக்கு வந்துவிட்டேன். ஏனென்றால், அடுத்த நாள் காலை 10 மணிக்கு டி. வி. எஸ் கம்பெனியில், வில் போர்ட்ஸ் ஆபிசர் பதவிக்கான இன்டர்வியூ இருந்தது.

இந்த இன்டர்வியூவுக்கு என்னைப் போக விடாமல் தடுப்பதும், என்னைக் கிரிமினல் குற்றவாளியாக்கி விட்டால், அந்த வேலை கிடைக்காது என்றும் அவர்கள் செய்த சதி, என்று பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.

அதற்குள் அந்தத் தம்பதியினர் 5000 ரூபாய் வரை செலவு செய்து விட்டார்கள். எப்படியும் 7 ஆண்டுகள் சிறைக்குள் தள்ளிவிட வேண்டும் என்பது தான் திட்டம். கற்பழிப்பு முயற்சி, குழந்தையை கொல்லுதல் , வீடு புகுந்து கொள்ளையடித்தல். இப்படி பல குற்றப் பிரிவுகள்.

கடைசியாக 75 கேஸ் என்பார்களே, அந்தக் கேஸ் போட்டு, சைதாப்பேட்டை கோர்ட்டில், இது முதல் முறை என்பதால், மன்னித்து விடுகிறோம் என்று நீதிபதி தீர்ப்பளித்து, கேஸை முடித்தார்.

இப்படி வாழ்க்கையில், போலிஸ், கேவில், கோர்ட் என்ற புது அனுபவத்தைக் கொடுத்த காமெடி வில்லனின் கண்பார்வையிலிருந்து போய்விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

எனக்கு டி. வி. எஸ்.ம்பெனியில் ஸ்போர்ட்ஸ் ஆபிசர் பதவி கிடைத்ததும், அந்த வீட்டைக் காலி செய்துவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். காலியும் செய்து புறப்பட்டேன்.

ஒண்ட வந்த பிடாரி, ஊரையே விரட் டியது என்பது பழமொழி, என் வாழ்வில் உண்மை சம்பவமாயிற்று.

என்னை பயமுறுத்தவும், அடித்து சாய்க்கவும், அவர்கள்