பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி 156

தமிழில் எடுத்துக் கூறவேண்டும். அதற்கு புத்தகம் ஒரு கருவி. அவ்வளவு தான். அது தான் என் முயற்சியின் முத்தாய்ப்பாகும்.

அதற்காகத்தான், புத்தகம் எழுதும் ஆசிரியர், பதிப்பிக்கும் பதிப்பாசிரியர், அச்சிடும் அச்சகத்தார், விற்பனை செய்யும் விற்பனையாளர் என்று எல்லா பொறுப்புகளையும் நானே ஏற்றுக்கொண்டேன்.

என் புத்தகங்கள், எல்லா மாணவர்களின் கரங்களிலும், எல்லா மக்களின் கைகளிலும், எல்லாருடைய இல்லங்களிலும் இருக்க வேண்டும், என் முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்று இரவு பகலாக உழைத்தேன். உறவு, நட்பு, சொந்தம் பந்தம், என்று வாழ்க்கையின் மிக விரும்புகிறதையெல்லாம் தி யாகம் செய்துவிட்டு, ஒரு லட்சியத் தோடு உழைத்தேன். கடுமையாக உழைத்தேன்.

ஆகவே, வாசகர்கள் என் முயற்சியில் நோக்கத்தைத் தான் நினைத்துக் கொள்ளவேண்டும். நான் ஏற்றுக் கொண்ட குருநாதர்களின் பெருமைக்கு எந்தவிதமான குறையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில், நான் மிகவும் விழிப்பாக இருந்து வருகிறேன்.

நான் உணர்ச்சி வசப்பட்டு, புத்தகங்களை எழுதுவேன், விற் பேன். மக்களை வாங்கச் செய்வேன், என்று எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்காக, நான் உழைத்த உழைப்பு இருக்கிறதே, பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே, விட்ட உறவுகள், விழித்திருந்த இரவுகள், வாழ்க்கையில் அடிக்கடி வந்த சரிவுகள் இருக்கின்றனவே! அவை யெல்லாம் என்னை ஆட்டிப் படைத்து ஆளாக்கிய அவலங்கள். ஆமாம். அனுபவ. சிகரங்கள்.