பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.59

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

எவ்வளவு அவசியமாக இருந்ததோ, அது போலவே, புத்தகங்களை விற்பதற்கு, உடற்பயிற்சி செய்வது எனக்கு கட்டாய அவசியமாக இருந்தது.

உடலைத் தயார் செய்து கொண்டால்தான், என் புத்தகங்களை விற்க முடியும். விற்கமுடியும் என்பதைவிட, விற்றாகவேண்டும் என்பது கட்டாயம். ஏனென்றால், புத்தகம் பதிப்பிக்க தொடர்ந்து பணம் வேண்டுமே!

சென்னை நகரம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு, சைக்கிளிலேயே போய் வருவது பழக்கமாகப் போய்விட்டது. இதில் அவசர சூழ்நிலையும், அடிக்கடி அதிகமாக ஏற்பட்டு விடுவதும், எனக்கு வாடிக்கையாகவே போய்விட்டது.

புத்தகம் அச்சாகப் பிரிண்டிங் பேப்பர் வேண்டும், உடனே கொண்டுவந்து கொடுத்தால்தான், அச்சாகும். இல்லையேல் அடுத்த புத்தகத்திற்கான அச்சு பாரத்தை மெஷினில் ஏற்றிவிடுவோம். பிறகு, உங்கள் புத்தகம் அச்சாக இரண்டு மூன்று நாட்கள் பிடிக்கும் என்பார் அச்சக உரியைாளர்.

வேலை செய்கிற பள்ளியில், லீவும் எடுக்க முடியாது. மதிய உணவு இடைவேளை நேரத்திற்குள், இந்த வேலையைச் செய்தாக வேண்டும். கிடைப்பது 1 மணி நேரம்தான். அதற்குள், மைலாப்பூரிலிருந்து பாரிஸ் கார்னருக்குப் போய் அங்கு 3 அல்லது 4 ரீம்களை சைக் கிளில் கட்டிக் கொண்டு. கோடம்பாக்கம் வந்து அச்சகத்தில் போட்டுவிட்டு, மீண்டும் மைலாப்பூருக்குப் போய்விடவேண்டும்.

சைக் கிளில் செல்ல, வேகத்துடன் உடலில் சக்தியும் வேண்டுமல்லவா! இப் படி LI (οι) சோதனைகள். வேதனைகளாகத் தான் வரும். சலித்துக் கொள்ளவோ, சபித்துவிட்டு ஒதுங்கவோ முடியாதே. ஏனென்றால், இப்படிப் பட்ட சோதனைகளை, நான்தானே துக் கி, என் தலையில்