பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173

L TT 55 L_TT எஸ். நவராஜ செல்லையா

உருக்குகின்ற ஒயா நிலையை அல்லவா உண்டாக்கின.

ஒரு மெழுகுவர்த்தி ஒருபுறமாக எரிந்து கொண்டு வந்தால்தான், நீண்ட நேரம் எரியும். இரண்டு பக்கங்களிலுமாக எறிந்தால், சீக்கிரம் உருகி முடிந்துபோகும்.

இந்த உதாரணத்தை நான், பேசியவர்களிட மெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேன். பணம் தருகின்ற பதவி, மனம் மகிழ்கின்ற எழுத்து இந்த இரண்டில் ஒன்ற்ைத்தான் நான் ஏற்றாகவேண்டும்.

பல நாள் யோசனைகளுக்குப் பிறகு, பலத்த மனப் போராட்டத்திற்கு இடையில் நான் டி. வி. எஸ். வேலையை ராஜினாமா செய்தேன்.

எப்படியும் எழுதியே ஆக வேண்டும். எடுத்துக்கொண்ட இலட்சியத்தை முடித்தே ஆக வேண்டும் என்ற வெறிதான், என்னை வேலையில் இருந்து விடுவிடுத்துவிட்டது.

வேலையைவிட்டு, விடுதலை பெற்று வெளியே வந்தது, மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் வீட்டு நிலவரப்படி, சந்தோஷமாக இல்லை. சங்கடமாகவே இருந்தது.

வேலையில் இருந்தபோது குடும்ப வாழ்க்கை, தடைகள் இல்லாமல் ஒடிக்கொண்டிருந்தது. மாத வருமானம் இல்லை என்றதும் பிரச்சினைகள் வந்து மடக்கவே, திக் கித் திணற வேண்டியதாயிற்று.

என்மனதில், நாவலாசிரியர் திரு அகிலன் அவர்கள் என்னிடம் கூறியிருந்த கருத்து, அடிக்கடி மின்னல் வேகத்தில் வந்து வந்து தோன்றித் தோன்றி மறைந்தது.

திரு அகிலனும் நானும் ஒரு கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டபோதுதான், இந்த உரையாடல் வந்தது. சாப் பிட்ட பிறகு சிறிது நேரம், நானும், திரு அகிலனும், தொலைக் காட்சியில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய திரு