பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

காரைக் குடியில் முற்போக்கு நாடகமன்றம் என்ற பெயரில், கலைக்குழு ஒன்றை வைத்து கதை எழுதி, இயக்கி, தயாரித்து நடத்தி வந்தவர் தங்கராஜ என்பதை நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.

அந்த நாடகமன்றத்தில் நானும் கவிஞனாக இருந்து, பாடல்கள் எழுதி நடித்தும் வந்தேன் என்பதையும் நான் முன்பே எழுதியிருக்கிறேன்.

கதாசிரியர் தங்கராஜ் என்பவர், சினிமாவில் கதை, வசனம் எழுத பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறார் என்பதாலேயே, அவருக்கு செல்வாக்கும் அதிகமாக இருந்தது.

பல வெற்றி நாடகங்களை எழுதித் தயாரித்தவர் என்பதுடன், சினிமாத் துறைக்கும் சீக்கிரம் போய் விடுவார் என்பதால், அவருக்கு உதவி, தாங்களும் தங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொள்ள பட்டாம் பூச்சியாகப் பறந்தவர் பலர். அவருக்கு தனி மவுசும் இருந்த நேரம் அது.

நல்ல நாடகாசிரியராக் அவர் இருந்தாரே தவிர, நல்ல வசதியான சூழ்நிலையில் இல்லை. வயிற்றுப்பாடு வறுமைப்பாடு கொஞ்சம் அதிகம். நாங்கள் அதாவது மன்ற உறுப்பினர்கள் அடிக்கடி உதவி செய்வோம்.

சினிமாவுக்கு கதை வசனம் வாய்ப் புத் தேட அவர் சென்னைக்கு வரும்பொழுதெல்லாம் என்னிடம் அவர் உதவி கேட்பார். நானும் நண்பர் என்ற காரணத்திற்காக, உதவுவேன். அதாவது எனக்கு சம்பளம் 200 ரூபாயாக இருந்தபொழுது 50 ரூபாய் வரை தருவேன்.

காரைக்குடிக்கும் சென்னைக்கும் அப்போது ரயில் டிக்கட் 7 ரூபாய், 50 பைசாவாக இருந்த நேரம், அதனால் 50 ரூபாய் என்பது பயணச் செலவையும் பலநாள் சாப்பாடு பிரச்சினைகளையும் தீர்க்கப் பயன்பட்டது.