பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

அவர் கதை வசனம் என்றால், நான் பாடல்கள் எல்லாவற்றையும் எழுதுகிற வாய்ப்பைப் பெறுவது என்பது அவருடைய ஆசை. அதற்காகவும் உதவி செய்தேன் என்பது உண்மையானாலும், உண்மையான கலையார்வம் என்னுள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த கால கட்டத்தில்தான், இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அவர் சென்னைக்கு வந்து (1965 ஆம் ஆண்டு) நாகப்பன் என்பவருடன் நட்பு கொண்டு, சினிமா தயாரிக்கின்ற சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டார் தங்கராஜ்.

சேம்பியன் மூவிஸ் என்பது சினிமா கம்பெனியின் பெயர். ஒரு ரூபாய் என்பது கதையின் பெயர். கதை வசனம் தங்கராஜ், டைரக்ஷன் ராஜேந்திரன்.

சினிமா ஆபிஸ் வைக் கின்ற ஒரு இடத்தை பிடித்துவிட்டால், பைனான்ஸ் வாங்குவது எளிது. தரவும் ஒருவர் தயாராக இருக்கிறார் என்கிற சூழ்நிலை.

என்னிடம் வந்தார் தங்கராஜ். சென்னையில் இப் படிப் பட்ட சூழ் நிலை அமைந்திருக்கிறது. ஆரம்ப செலவுக்கு நீங்கள் ஆயிரம் ரூபாய் தரவேண்டும். அதற்குப் பிறகு, எல்லா வேலைகளும் எளிதாக நடந்து விடும் என்று தங்கராஜ் என்னிடம் விவரித்தார். இல்லை இல்லை. வற்புறுத்தினார்.

என் வாழ்க்கையே உங்கள் கையில்தான் இருக்கிறது. இந்த உதவியைச் செய்தால், நானும் உயர்ந்து விடுவேன். உங்களுக்கும் ஒரு நல்ல பிரகாசமான வாழ்க்கை அமைந்துவிடும் என்று தங்கராஜ் பல நாட்கள் பேசினார். அவர் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

என் தந்தையிடம் பலவாறாக எதிர்வாதம் செய்து, அவரை என் முடிவுக்கு ஒத்துக்கொள்ளச் செய்தது என் வேலையல்ல. விதியின் விளையாட்டு என்றே நான் கூறுவேன்.

என் தந்தையிடம் அனுமதி பெற்று, ஆயிரம் ரூபாயையும்