பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

அதனால், ஆபீஸ் வேண்டாம் என்றும், தங்கராஜ் காரைக்குடிக்குப் போகட்டும், மீண்டும் பிறகு சந்திக்கலாம் என்றும் பேசி முடிவு செய்தனர்

என்நம்பிக்கையின் முதல் படி, முதல் அடியை வாங்கியது. கனவின் புஜங்கள் ஒடிய ஆரம்பித்த போது, நிஜ வாழ்க்கையின் நிதர்சனம் தெரிந்தது.

இந்த வேதனையான சூழ்நிலையில் மனதுக்கு இதமான ஒரு சேதி வந்து சேர்ந்தது. ‘ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’ என்று என் மனைவி கடிதம் எழுதியிருந்தாள். மீண்டும் முகம் தெரியாத ஜோசியனின் நினைவு தோன்றி நின்றது.

உங்களுக்கு மகன் பிறப்பான் என்று கையிலடித்துச் சொன்ன, அந்த தீர்க்கதரிசிக்கு நன்றி சொன்னேன். காரணம், அந்த அற்புத மனிதரின் வார்த்தைகளில் எனக்கு அபார நம்பிக்கை ஏற்பட்டிருந்தது தான்.

வேலையை ராஜினாமா செய்வது அடுத்து, உங்களுக்கு மகன் பிறப்பான் என்றது நீங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற்று இலட்சாதிபதியாகுவீர்கள் என்றது.

இரண்டு நடந்துவிட்டது. மூன்றாவதும் நடக்கும். இப்படித்தான் என் நம்பிக்கை ஆல மரமாக பரந்து விரிந்து நின்றது.

தங்கியிருந்த சினிமா கம்பெனி மூடப்பட்டு விட்டது. நான் எங்கே தங்குவது என்ற என் கேள்வி என்னைத் தடுமாற வைத்தது.

எனது பள்ளி தலைமை ஆசிரியை திருமதி தாரா சத்யநாராயணன் அவர்களுடன் ஒரு நாள் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சுக்கு இடையில், தங்க இடம் இல்லை

என்ற என் கஷ்டத்தையும் சொன்னேன்.